SuperTopAds

ஆற்றை மறித்து விவசாயம் செய்யும் இராணுவம்,25 விவசாய குடும்பங்கள் நிர்க்கதி..

ஆசிரியர் - Editor I
ஆற்றை மறித்து விவசாயம் செய்யும் இராணுவம்,25 விவசாய குடும்பங்கள் நிர்க்கதி..

வவுனியா- அருவித்தோட்டம் ஆற்றை வழிமறி த்து இராணுவம் விவசாயம் செய்வதால் குறி த்த ஆற்றை நம்பியிருக்கும் 25 விவசாய குடு ம்பங்கள் மோசமான பாதிப்பை எதிர்கொண் டுள்ளனர்.

வவுனியா மாவட்டம் செட்டிக்குளம் பிரதேச செயலாளர் பிரிவின்கீழ் உள்ள அருவிஆற்றினை மறித்து உள்ளூர் விவசாயிகள் விவசாயம் மேற்கொள்வது வழமை . 

இதன் பிரகாரம் இம்முறையும் அதனை மறித்து நீர் தேக்கி அதன் மூலம் 25 ஏக்கர் சிறுபோகம் மேற்கொண்டிருந்தனர். இதேநேரம் எவரது அனுமதியும்  இன்றி 

செட்டிகுளம் மெனிக் பாம் பகுதியில் உள்ள இராணுவத்தினர் தாம் நிலைகொண்டுள்ள பகுதியில் 30 ஏக்கர் வயல் செய்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு இராணுவத்தினர் தாம் மேற்கொண்ட நெற் செய்கைக்காக குறித்த ஆற்றின் மறிப்பை உடைத்துள்ளனர். இருப்பினும் இராணுவத்தினர் அணையை உடைத்தமை தொடர்பில் அறியாத விவசாயிகள் 

அதனை மீண்டும் சீர் செய்து மறித்துள்ளனர். இதன்போதே படையினர் விவசாயிகளை அச்சுறுத்தி விரட்டியுள்ளனர். இதனால் விவசாயிகள் குறித்த விடயத்தை உடனடியாக நீர்ப்பாசன பொறியியலாளர் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

 இதன்போது பொறியியலாளர் படையினருடன் தொடர்பு கொண்டுள்ளார்.  எனினும் படையினர் பொறியியலாளரையும் அச்சுறுத்தி வெளியேற்றியுள்ளனர்.

இதன் காரணமாக உள்ளூர் விவசாயிகளினால் விதைக்கப்பட்ட 25 ஏக்கர்  வயலும் தற்போது முழுமையாகவே அழிவடைந்துவிட்டது. 

எனவே இது தொடர்பில் மாவட்டச் செயலகம் கவனம் செலுத்தி எதிர்காலத்தில் படையினரின் தலையீடு இருப்பதனை தடை செய்வதோடு தற்போது பாதித்த உள்ளூர் விவசாயிகளிற்கு இழப்பீடும் வழங்க வேண்டும் . 

என நேற்று முன்தினம் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் விடுக்கப்பட்ட கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது.