SuperTopAds

ஜனாதிபதி வழங்கிய உத்தரவாதத்திற்கமைய மயிலிட்டி மகாவித்தியாலயம் விடுவிப்பு..

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதி வழங்கிய உத்தரவாதத்திற்கமைய மயிலிட்டி மகாவித்தியாலயம் விடுவிப்பு..

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா வழங்கிய உத்தரவாதத்திற்கு அமைவாக 30 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் இராணுவ ஆழுகைக்குள் இருந்த மயிலிட்டி மகாவித் தியாலயம் இன்றைய தினம் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 

கடந்த மாதம் மயிலிட்ட துறைமுகம் புனரமைப்பு பணிகளை ஆரம்பிப்பதற்காக யாழ்.வந்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிடம் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் அகப்பட்டி ருக்கும் மயிலிட்டி மகாவித்தியலயத்தை உடனடியாக விடுவிக்குமாறு

தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராஜா கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு பதிலளித்த ஜனாதிபதி இராணுவ தளபதிகளுடன் உரையாடி மயிலிட்டி மாகாவித்தியாலயத்தை 2 வாரங்களுக்குள் விடுவிப்பேன் எனவும், 

தொடர்ந்து படிப்படியாக மயிலிட்டி பிரதேசத்தில் விடுவிக்கப்படாமல் உள்ள மக்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவிப்பேன் எனவும் உத்தரவாதம் வழங்கியிருந்தார். இதற்க மைவாக இன்று காலை மயிலிட்டி மகாவித்தியாலயம் விடுவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிகழ்வு இன்று காலை மயிலிட்டி மகாவித்தியாலய வளாகத்தில் நடைபெற்றது. இதன் போது பாடசாலை வளாகத்தை விடுவிப்பதற்கான உத்தரவு பத்திரத்தை யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி யாழ்.மாவட்ட செயலரிடம் வழங்கினார்.

இதேவேளை மயிலிட்டி மகாவித்தியாலய வளாகம் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளபோது தம் அதனை சூழவுள்ள மக்களின் காணிகள் தொடர்ந்தும் படையினரின் ஆழுகைக்குள்ளேயே இருந்து வருகின்றது.