SuperTopAds

தமிழ் இனத்தை காட்டிக் கொடுக்கும் ஈன செயலை செய்தவன் நான் அல்ல..

ஆசிரியர் - Editor I
தமிழ் இனத்தை காட்டிக் கொடுக்கும் ஈன செயலை செய்தவன் நான் அல்ல..

நான் எந்தக் காலத்திலும் எந்தச் சந்தியிலும் நின்று எமது இனத்தைச் சேர்ந்த எவனையும் காட்டிக் கொடுக்கவோ அல்லது எமது இனத்தைச் சேர்ந்தவர்களையே கொன்று அழிக்கும்  ஈனச் செயலை செய்தவன் அல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

சமஸ்டியை கோராதமையினால் 70ஆண்டுகால போராட்டத்திற்கு செய்த துரோகம் எனப்படுகின்றதே என ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு பதிலளித்தார்.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில் ,,

நான் 40 நிமிடமாக வழங்கிய ஓர் செவ்வியில் கூறிய உவமையின் இடைத்துண்டை வைத்து வேண்டுமென்ற திருவுபடுத்தும் செய்தியை அறியாது திருவுபடுத்தப்படுகின்றது. இதில் என்னை துரோகியென வடக்கு மாகாண சபையில் அமைச்சர் எனக் கூறிக்கொள்ளும் ஒருவரே மேற்படி கருத்தினை கூறியுள்ளார்.

இவ்வாறு என்னை துரோகி எனக் கூறுபவரின் கட்சியைப்போல் நான் ஒரு நாளும் ஒரு சந்தியிலும்ஒருவனையும் தலை வெட்டவில்லை. அல்லது சந்திக்குச் சந்தி நின்று தலையாட்டிக் காட்டிக் கொடுக்கவும் இல்லை. மாறாக இவர்களால் புலி என்னும் பெயரில்  காட்டிக்கொடுப்பில் இருந்து தப்பி வந்தவர்களை பராமரித்தேன்.

இவ்வாறெல்லாம் கொன்றொழித்து எமது இனத்தை  காட்டிக் கொடுத்தவர்கள் என்னை துரோகி என்பதே வேடிக்கையானது. இதேநேரம் சமஸ்டியை கொள்கையாக கொண்ட எமது கட்சியிடம் சமஸ்டி தொடர்பில் கூறுகின்றனர்.

 சமஸ்டியை கோரியதனால் எமது கட்சியின்தலமைக்கெ எதிராக வழக்புத் தாக்கல் செய்தபோது அதற்கு எதிராக நானே மன்றில் தோன்றி சமஸ்டியை கோர முடியும் என வாதாடி வெற்றியும். பெற்றேன். அதன்போது உயர் நீதிமன்றம் எமது கட்சி சமஸ்டியை கோர முடியும் எனத் தீர்ப்பளித்திருந்தது.

இவ்வாறு நான் வாதாடி சமஸ்டியை கோர முடியும் என பெற்ற தீர்ப்பையும் ஒருவர் தபால் காரன் போன்று தூக்கிச் சென்று சமஸ்டியை கோர முடியும் என நீதி மன்றமே தீர்ப்பளித்துள்ளது. என மகாநாயகர்க்களிற்கு தபால் காரன் வேலை பார்த்த சம்பவமும் உண்டு .

 கூட்டமைப்பு தவறுவிடுகின்றது எனக் கூறுகின்றார். ஆம் கூட்டமைப்பு முதலமைச்சரை தொடர்ந்தும் வைத்திருந்தமையே கூட்டமைப்பு விட்ட தவறு என்றார்.