SuperTopAds

பச்சிளம் குழந்தைகளுடன் வியாபாரம் செய்யும் பெண்கள்..

ஆசிரியர் - Editor I
பச்சிளம் குழந்தைகளுடன் வியாபாரம் செய்யும் பெண்கள்..

நல்லூர் உற்சவ காலத்தின் போது தற்காலிகமாக அமைக்கப்பட்டு உள்ள கடைத்தொகுதி வீதிகளில் கைக்குழந்தைகள் , சிறுவர்களுடன் ஊதுபத்தி விற்பனை செய்பவர்கள் , யாசகம் செய்பவர்கள் , மடிப்பிச்சை எடுப்பவர்கள் தொடர்பில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என பலராலும் குற்றம் சாட்டப்படுகின்றது. 

வவுனியா உள்ளிட்ட வெளிமாவட்டத்தை சேர்ந்த பெண்கள் கைக்குழந்தைகள் , சிறுவர்களுடன் ஊதுபத்தி பெட்டிகளை விற்கின்றார்கள்,   யாசகம் செய்கிறார்கள் ,  மடிப்பிச்சை எடுக்கிறார்கள் .

இது தொடர்பில் அப்பகுதியில் கடமையில் இருக்கும் யாழ். மாநகர சபை பொதுச்சுகாதார பரிசோதகர்கள் , வரியிறுப்பாளர்கள் , பொலிஸார் ஆகியோரிடம் ஆலயத்திற்கு வந்த பலரும் முறையிட்டுள்ளனர். ஆனால் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அது தொடர்பில் அங்கு கைக்குழந்தையுடன் ஊதுபத்தி விற்கும் பெண் ஒருவரிடம் வினாவிய போது , 

நங்கள் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள். நல்லூர் உற்சவ காலத்தில் வியாபர நோக்குடன் வந்து யாழ்,நகர் பகுதியில் உள்ள விடுதியில் தங்கி உள்ளோம். நல்லூரில் ஊது பத்தி விற்று விட்டு இரவு நடந்து (சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம்) விடுதிக்கு செல்வோம். என தெரிவித்தார். 

எத்தனை பேர் வந்தீர்கள் ?, யார் இங்கு கூட்டி வந்தார்கள் ? போன்ற மேலதிக கேள்விகளுக்கு அவர் பதிலளிக்காமல் தனது வியாபர நடவடிக்கையில் ஈடுபட தொடங்கினார். 

இவர்கள் ஒரு குழுவாகவே வெளிமாவட்டங்களில் இருந்து வந்துள்ளார்கள். அவர்களை அழைத்த் வந்து இங்கு வியாபார நடவடிக்கையில் ஈடுபடுத்தும் நபர்கள் யார் என்பது கண்டறிய முடியவில்லை.