நல்லாட்சி காலத்தில் குடியேற்றங்கள் நடக்கவில்லை என்பது மகிழ்ச்சியான செய்தி அல்ல..

ஆசிரியர் - Editor I
நல்லாட்சி காலத்தில் குடியேற்றங்கள் நடக்கவில்லை என்பது மகிழ்ச்சியான செய்தி அல்ல..

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தலமையிலான ஆட்சியில் சிங்கள குடியேற்றங்கள் நடக்கவில்லை. என்பது தமிழ் மக்கள் பெருமைப்படக்கூடிய ஒரு விடயமல்ல. காரணம் அத்தனை சிங்கள குடியேற்றங்களையும் செய்தவர் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் மகாவலி    அபிவிருத்தி  அமைச்சராக இருந்த இப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவேயாகும்.

மேற்கண்டவாறு வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் கூறியுள்ளார். நல்லாட்சி அரசாங்க த்தின் காலத்தில் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் எவையும் இடம்பெறவில்லை. என அமைச்சர் றாஜித சேனாரத்ன கூறியிருந்த கருத்து தொடர்பாக ரவிகரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

இந்த விடயம் தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேனா தலமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங் கள் எவையும் இடம்பெறவில்லை. என அமைச்சர் றாஜித சேனாரத்ன கூறியிருக்கும் கருத்து தமிழ் மக்கள் பெருமைப்படக்கூடிய அல்லது மகிழ்ச்சியடையக்கூடிய கருத்தல்ல. 

அதற்குக் காரணங்கள் உள்ளன. இதே நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலேயே முல்லைத்தீவு மற்று ம் வவுனியா மாவட்டங்களின் எல்லையில் பாரியளவிலான சிங்கள குடியேற்றத்தை உருவாக் கும் நோக்குடன் ஹிபுல் ஓயா திட்டம் கொண்டுவரப்பட்டது. பின்னர் வெள்ளக்கல்லடி என்ற பகுதியில் சிங்கள மக்கள் குடியேற முயற்சித்த நிலையில் தமிழ் மக்கள் காட்டிய எதிர்ப்பினால் அது நிறுத்தப்பட்டது. 

அதேபோல் சிவந்தாமுறிப்பு என்ற பகுதியில் அண்மையில் சிங்கள மக்கள் கனரக வாகனங்களுடன் வந்து குடியேற முயற்சித்த நிலையில் அதுவும் தமிழ் மக்க ளுடைய கடுமையான எதிர்ப்பினால் கைவிடப்பட்டது. இவ்வாறு பல சம்பவங்களை அடுக்கிக் கூறலாம். மேலும் மகாவலி அதிகாரசபை ஊடாக காணிகளை அபகரிப்பதற்கு மேலாக வனவள திணைக்களம், 

தொல்லியல் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் என பல வடிவ ங்களில் இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் தமிழ் மக்களுடைய பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலங்கள் விழுங்கப்பட்டன. இதேபோல் 1988ம் ஆண்டு சித்திரை மாதம் 15ம் திகதி மகாவலி அதிகாரசபையின் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டது. 

அதனை தொடர்ந்து 2007ம் ஆண்டு பங்குனி மாதம் 9ம் திகதி மகாவலி அதிகாரசபையின் மீள் எல்லை நிர்ண யம் செய்யப்பட்டது. அதனை செய்தவர் வேறு யாருமல்ல. இப்போதைய ஜனாதிபதியும் அப் போதைய மகாவலி அபிவிருத்தி அமைச்சருமான மைத்திரிபால சிறிசேனாவே. இதன் ஊடாகவே முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களிலும், 

வவுனியா மாவட்டத்தின் எல்லை கிராமங்களிலும் உள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான பாரம்பரிய தமிழ் கிராமங்கள் சிங்கள மயமாக்கப்பட்டது. இருபோகங்களும் நெற்செய்கை நடந்த பல ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் சிங்கள மக்களுக்கு தாரைவார்க்கப்பட்டது. இதனால் அந்த நிலங்களுக்கு சொந்தமா ன மக்கள் நிர்க்கதியாக நிற்கிறார்கள். 

இத்தனைக்கும் காரணமான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தான் அடாத்தாக தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து குடியேற்றிய சிங்கள மக்களுக்கு நிரந்தர குடியிருப்புக்கான காணி உத்தரவு பத்திரங்களை இன்று வழங்கிக் கொண்டிருக்கின்றா ர். தமிழர் நிலங்களில் திட்டமிட்டு சிங்கள மக்களை குடியேற்றுவதில் ஜனாதிபதி விருப்பமற்றவர். 

மஹிந்தராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் அன்றிருந்த நிர்ப்பந்தங்களினால்தான் குடியேற்றங்களை அவர் செய்தார் என யாரும் கூறக்கூடும். அப்படியே இருந்தாலும் இன்று சகல அதிகாரங்களுடனும் ஜனாதிபதியாகவும், மகாவலி அபிவிருத்தி அமைச்சராகவும் இருக்கும் அவர் அடாத்தாக குடியேற்றப்பட்ட சிங்கள மக்களுக்கு எதற்காக காணி உத்தரவு பத்திரங்களை வழங்கவேண்டும்? இன்று நாங்கள் சிங்கள மக்களை குடியேற்றவில்லை. 

என கூறுவதன் ஊடாக முன்னர் சிங்கள மக்கள் அடாத்தாக தமிழ் மக்களின் காணிகளை பறித்து குடியேற்றப்பட்டார்கள் என்ற உண்மையை ஒத்துக்கொள்ளும் அரசாங்கம் முன்பு நடைபெற்ற அந்த தவறை நிவர்த்தி செய்துள்ளதா? எதனையும் செய்யாமல் நாங்கள் குடியேற்றவில்லை என கூறுவதன் ஊடாக பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைத்துவிடாது.

 ஆகவே அமைச்சர் றாஜிதசேனாரத்ன அல்லது அரசாங்கத்தின் இத்தகைய கருத்துக்களால் தமிழ் மக்கள் பெருமைப்படவோ அல்லது மகிழ்சியடையவோ முடியாது. இத்தகைய கருத்துக்கள் தமிழ் மக்களை மந்தைக ளாக நினைத்து கூறப்படும் கருத்துக்கள் மட்டுமேயாகும். இதனால் தமிழ் மக்களிடம் எரிச்ச லும், கோபமும் உண்டாகுமே தவிர யாரையும் புனிதர்களாக எண்ணவைக்காது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு