யாழ்.மாவட்டத்தில் மேலும் ஒருசில காணிகள் விடுவிக்கப்படவுள்ளது..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் மேலும் ஒருசில காணிகள் விடுவிக்கப்படவுள்ளது..

யாழ். குடாநாட்டில் மூன்று இடங்களில் படையினரின் ஆக்கிரமிப்பில் இருந்த  பொதுமக்களுக்குச் சொந்தமான மூன்று காணிகள் எதிர்வரும் 6 ஆம் திகதி வியாழக்கிழமை விடுவிக்கப்படவுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வலி. வடக்கு - தெல்லிப்பழை பிரதேச  செயலாளர் பிரிவின் கீழ் மயிலிட்டி- கலைமகள்  வித்தியாலயமும் அதனைச் சூழவுள்ள 3 ஏக்கர்  காணியும் விடுவிக்கப்படுகிறது. அத்துடன் 

குரும்பசிட்டியில் கிராம அபிவிருத்திச் சங்கம், தெல்லிப்பழை பல நோக்கு கூட்டுறவுச் சங்கம் ஆகியவற்றின் நிலப்பரப்புக்களும் அதனை சூழவுள்ள 12 ஏக்கர் காணியும் அரச அதிபரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளன.

மேலும் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் கீழ் வரும் ஆனைக்கோட்டை - கூழாவடி இராணுவ  முகாமும் அதனைச் சூழவுள்ள 8 வீடுகளும் விடுவிக்கப்படவுள்ளன.

2015 இல் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் கூலாவடி காணிகளை இராணுவத்திற்கு வழங்க தீர்மானிக்கப்பட்டு   காணி சுவீகரிப்பு இடம்பெற இருந்து. இதையறிந்து  காணி உரிமையாளர் போராட்டம் நடத்தியவேளை.  

இந்த காணி சுவீகரிப்பை நிறுத்தும்படி   ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் கட்டளையிட்டதால் இது இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. .

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு