வடமாகாண அமைச்சர் சபை குழப்பம், 27 மக்கள் நல திட்டங்கள் கிடப்பில்..
வடக்கு மாகாண அமைச்சர்கள் தொடர்பான சர்ச்சைக்கு முதலமைச்சர் தனது சிபார்சினை வழங்காத நிலையில் அமைச்சர் வாரியம் கடந்த இரு மாதங்களாக இடம்பெறாதமையினால் இதுவரை 27 முக்கிய விடயங்கள் தீர்மானத்திற்காக தேக்கத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கு மாகாணசபையின் அமைச்சுக்களிற்கு உட்பட்ட விடயங்களிலில் மேற கொள்ள வேண்டிய அமைச்சரவைத் தீர்மானங்கள் மேற்கொள்ளாது பல விடயங்கள் தேக்கத்தில் கிடப்பதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
இவ்வாறு தேக்கத்தில் கிடக்கும் 27 அமைச்சரவைத் தீர்மானத்தில் கல்வி அமைச்சின் 6 தீர்மானங்களும் சுகாதார அமைச்சின் 5 தீர்மானங்கள் விவசாய அமைச்சின் 6 தீர்மானங்களும் உள்ளடங்கியுள்ளன. இதேநேரம் மாகாண சபையின் ஆயுள் காலம் எதிர்வரும் ஓக்டோபர் 25ம் திகதியுடன் நிறைவுறும் நிலையில் பல பணிகளை முடிவுறுத்த வேண்டிய நெருக்கடி நிலையினையும் அதிகாரிகள் எதிர்கொள்கின்றனர்.
இதன் காரணமாக வரவு செலவுத் திட்டத்தில் அனுமதிக்கப்பட்ட விடயங்கள் மற்றும் சில நியமன விடயங்கள் ஆளுநரின் நேரடி அனுமதியுடன் முன்கொண்டு செல்லப்படும் அதேநேரம் புதிய நியமனங்களிற்கான சாத்தியங்களும் மத்திய அரசின் அனுமதிகளும் உள்ளபோதும் மாகாண அமைச்சர் வாரியத்தின் ஒப்புதல் இன்றி மேற்கோள்ள முடியாத பல விடயங்கள் தொடர்பிலேயே அதிகாரிகள் தற்போது தின்றுகின்றனர்.
இதேரேம் அமைச்சர் வாரியம் இடம்பெற்று அனுமதி பெற்றால் அன்றி மேலும் காலதாமதம் ஏற்படுன் மாகாண சபையின் ஆயுள் காலம் நிறைவு பெறும் தருவாயில் உடனடியாக ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு சென்று பணிகளை முடிவுறுத்துவதற்கான போதிய கால அவகாசமும் இன்மையால்
அதிகாரிகளே நெருக்கடிக்குள் சிக்கித் தவிப்பதாக வடக்கு மாகாண அமைச்சின் செயலாளர் ஒருவர் குறிப்பிட்டார்.