SuperTopAds

பச்சை பொய்யை கூறிக்கொண்டிருக்கிறார் எம்.ஏ.சுமந்திரன்..

ஆசிரியர் - Editor I

சமஸ்டி தீர்வு தேவையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியது அப்பட்டமான உண்மையாகும். அந்த உண்மை அம்பலப்பட்டிருக்கும் நிலையில் அவர் இப்போது அப்பட்டமான பொய்களை கூறிக்கொண்டிருக்கின்றார். 

மேற்கண்டவாறு தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியுள்ளார். சமகால அரசியல் நிலமைகள் குறித்து இன்று யாழ்.ஊடக அமையத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

இதன்போது மேலும் அவர் கூறுகையில், 

சுமஸ்டி அடிப்படையிலான தீர்வு தேவையில்லை. என காலியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் சுமந்திரன் பேசியது அப்பட்டமான உண்மை. அதற்கான ஆதாரங்கள் உள்ளது என கூறிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது மடிகணனியில் சிங்கள மொழியில் சுமந்திரன் 

காலியில் ஆற்றிய உரையை ஊடகங்களுக்கு காண்பித்தார். தொடர்ந்து அவர் கூறுகையில் தமிழ் மக்களுக்கு சமஷ்டி வேண்டாம் என கூறும் சுமந்திரன் தொடர்ந்து 13ம் திருத்தச்சட்டத்தில் சில அதிகாரங்களை வழங்கி திருத்தம் செய்தால் போதுமானது 

என கூறுகிறார். மேலும் அதனைதான் நாங்கள் தேர்தல் விஞ்ஞாபனங்களிலும் குறிப்பிட்டுள்ளோம். அதற்கே மக்கள் தொடர்ச்சியாக ஆதரவை வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள் என்றும் கூறியுள்ளார். இது அப்பட்டமான உண்மை. 

இந்த உண்மை ஊடாக சுமந்திரனும் தமிழ்தேசிய கூட்டமைப்பும் தமிழ் மக்களிடம் அம்பலப்பட்டிருக்கும் நிலையில் சமஸ்டி வேண்டாம் என தான் கூறவில்லை என்றும், சமஷ்டி பெயர்பலi கயே வேண்டாம் என்று கூறியதாகவும் அப்பட்டமான பொய்யை 

சொல்லிக் கொண்டிருக்கின்றார். இது சுமந்திரனின் தனிப்பட்ட கருத்தாக அமையாது. காரணம் சுமந்திரன் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளர். ஆகவே சுமந்திரனின் கருத்து கூட்டமைப்பின் கருத்தாகவே அமைந்துள்ளது. 

மேலும் சமஸ்டி தேவையில்லை என சுமந்திரன் கூறவில்லை, அவர் சமஷ்டி பெயர்பலகை வேண்டாம் என்றே கூறினார் என ஒரு கருத்துக்கு வைத்துக் கொண்டால், எதற்காக 13ம் திருத்தச்சட்டம் குறித்து அங்கே பேசவேண்டி வந்தது? 

13ம் திருத்தச்சட்டம் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வாகாது. அதனை நாங்கள் அடியோடு நிராகரிக்கிறோம். என மக்களுக்கு கூறும் தமிழ்தேசிய கூட்டமைப்பு அதன் நாடாளுமன்ற உறுப்பினர் எதற்காக 13ம் திருத்தச்சட்டம் குறித்து அங்கே பேசினார்?

இந்த கேள்விகளுக்கு பதில் இருக் கப்போவதில்லை. காரணம் மக்கள் மத்தியில் அம்பலப்ப ட்டிருக்கும் நிலையில் இப்போது சுமந்திரனும் தமிழ்தேசிய கூட்டமைப்பும் அப்பட்டமான பொய்யை கூற தொடங்கியுள்ளது. 

இது ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க மறுபக்கம் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளான ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், மற்றும் புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன் ஆகியோர் ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள கருத்தில், 

சுமந்திரன் அவ்வாறு பேசியுள்ளாரா? என்பது தெரியவில்லை. ஆனால் அப்படி பேசியிருந்தால் தவறு என கூறியிருக்கின்றார்கள். இதன் அர்த்தம் தாங்கள் சிறந்தவர்கள் என காட்டிக் கொண்டு தாங்கள் தப்பித்துக் கொள்வதுதான்.

இந்த விடயத்தை பொறுத்தளவில் வெறுமனே சம்மந்தன் மீதும், சுமந்திரன் மீதும் குற்றத்தை சுமத்திவிட்டு இருப்பதற்கு நாங்கள் தயாராக இல்லை. இந்த துரோகத்திற்கு காரணம் தமிழ்தேசிய கூட்டமைப்பில் உள்ள அத்தனைபேரும். 

குறிப்பாக புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பான 6 உபகுழுக்களில் ஒன்றான அதிகார பகிர்வு தொடர்பான ஆலோசனைகளை பெறும் குழுவின் தலைவராக இருக்கிறார். 

அந்தவகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் சித்தார்த்தனும் ஒரு பங்காளியாக இருக்கிறார். ஒற்றையாட்சி அரசியலமைப்பு உருவாக்கத்தில் பங்காளியாக இ ருந்து கொண்டிருக்கும் சித்தார்த்தன் தமிழ் மக்கள் பேரவையிலும் இருக்கிறார். 

தமிழ் மக்கள் பேரவை சமஸ்டி அடிப்படையிலான தீர்வை கேட்கிறது. அப்படியிருந்து கொண்டு நடந்து முடிந்த உள்ளுராட்சிசபை தேர்தலிலும் சித்தார்த்தன் ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கு அங்கீகாரம் வழங்ககோரி தேர்தலில் போட்டியிட்டார். 

அப்போதும் சித்தார்த்தன் கூட்டமைப்புக்கள் ஒன்றாக இருந்தார். இதேபோல் ஒரு வித்தியாசமும் இல்லாமல் செயற்பட்டவர் செல்வம் அடை க்கலநாதன். ஆகவே சுமந்திரன் கூறியது சுமந்திரனின் தனிப்பட்ட கருத்தாகாது. 

இப்போது செல்வம் அடைக்கலநாதனும், சித்தார்த்தனும் கூறிய கருத்துக்களே தனிப்பட்ட கருத்துக்களாகும். ஆகவே இந்த மாபெரும் துரோகத்திற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பில் உள்ள அத்தனை பேரும் துணைபோயுள்ளார்கள். 

கூட்டமைப்பு தொடர்ந்து பொய்களை கூறி..கூறி இப்போது அப்பட்டமாகி கொண்டிருக்கின்றது. பச்சையாக மக்களிடம் அம்பலப்படும் இடங்களில் தாங்க ள் அப்படி சொல்லவில்லை, செய்யவில்லை என பொய்களை கூறிக்கொண்டிருக்கின்றது. 

இதற்கும்மேல் தமிழ்தேசிய கூட்டமைப்பு அம்பலப்படும். அதனை மக்கள் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும். தாங்கள் கூறும் பொய்களையும், தாங்கள் செய்யும் துரோகங்களையும் மக்க ள் புரிந்து கொள்ளப்போவதில்லை. 

என்பதாலேயே தமிழ்தேசிய கூட்டமைப்பு மக்கள் மத்தியில் இன்றும் நடமாடிக் கொண்டிருக்கின்றது. அதனை மக்கள் தெளிவாக உணர்ந்து கொள்வது அவசியம் என்றார்.