SuperTopAds

கிளிநொச்சி பொலிஸாருக்கு எதிராக நீதி அமைச்சர் முன்னிலையில் மரத்தில் எறி முதியவர் போராட்டம்..

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சி பொலிஸாருக்கு எதிராக நீதி அமைச்சர் முன்னிலையில் மரத்தில் எறி முதியவர் போராட்டம்..

கிளிநொச்சி பொலிசார் இலஞ்சம் வாங்குவதாக தெரிவித்து முதியவர் ஒருவர் நீதி அமைச்சர் , பிரதம நீதியரசர் ஆகியோருக்கு முன்னால் மரத்தில் ஏறி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடாத்தினார். 

கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற கட்டட தொகுதிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்றைய தினம் திங்கட்கிழமை காலை நடைபெற்றது. அந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக கலந்து கொண்டிருந்த நீதி அமைச்சர் தலதா அத்துகோரல , கிளநொச்சி மாவட்ட நீதிபதிகள் , கிளிநொச்சி - முல்லைத்தீவு பிரதி பொலிஸ் மா அதிபர் உள்ளிட்டோர் மேடையில் அமர்ந்திருந்த வேளை மேடைக்கு எதிரே வீதியோரமாக இருந்த மரத்தில் முதியவர் ஏறி கோசம் எழுப்பினார். 

முதியவர் மரத்தின் மீது ஏறி நின்று இலஞ்ச ஊழலுக்கு எதிரான சுவரொட்டியை கையில் ஏந்திய வண்ணம் இலஞ்ச ஊழலுக்கு எதிராக கோசம் எழுப்பினார். 

கிளிநொச்சி பொலிசார் இலஞ்சம் வாங்குவதாகவும் , தன்னை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிசார் ஒருவர் அச்சுறுத்தி இலஞ்சம் பெற்றார் எனவும் குற்றம் சாட்டி இருந்தார். 

அதனை அடுத்து குறித்த மரத்தின் கீழ் சென்ற சட்டத்தரணிகள் , பொலிசார் முதியவருடன் சமர பேச்சில் ஈடுபட்டு அவரை மரத்தில் இருந்து இறங்கினார்கள். 

மரத்தில் இருந்து இறங்கிய முதியவரை பொலிசார் அங்கிருந்து வெளியே அழைத்து சென்றனர்.