SuperTopAds

இடைக்கால நிவாரணம் இழப்பீடாகாது..

ஆசிரியர் - Editor I
இடைக்கால நிவாரணம் இழப்பீடாகாது..

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு வழங்கப்படும் இடைக்கால நிவாரணம் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடாக அமையாது. இடைக்கால நிவாரணத்தை இழப்பீ டாக மக்கள் கருதவேண்டிய அவசியமே இல்லை. 

மேற்கண்டவாறு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார். பருத்துறையில் அ மைந்துள்ள தமிழ்தேசிய கூட்டமைப்பின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாள ர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம், 

காணாமல்போனவர்கள் தொடர்பான அலுவலகம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் களுக்கு இடைக்கால நிவாரணத்தை வழங்கவுள்ளது. இது காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நிகராகுமா? என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். 

இதற்கு பதிலளிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன் போது மேலும் அவர் கூறுகையில், 

இந்த விடயம் தொடர்பாக சிலர் எங்களோடு பேசினார்கள். காணாமல்போனவர்கள் தொடர் பான அலுவலகம் அமைத்த பின்னர் அந்த அலுவலகம் பல இடங்களில் கூட்டங்களை நடாத்தியுள்ளது. 

இதில் பல மக்கள் கலந்து கொண்டுள்ளனர். பலர் கடுமையாக எதிர்த்துள்ளனர். கூட்ட ங்களில் கலந்து கொண்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் விசாரணைகளை நடாத்தி தமது உறவினர்கள் தொடர்பான உண்மை நிலை வெளிப்படுத்தப்படவேண்டும். 

என கேட்டுள்ளதுடன் விசாரணைகள் நிறைவடையும் வரையில் வாழ்வாதாரரீதியாக பாதிக்கப்பட்டுள்ள தமக்கு நிவாரணம் வழங்கப்படவேண்டும். என கேட்டுள்ளார்கள். அதற்கமையவே இடைக்கால நிவாரணம் ஒன்றை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

ஆகவே இடைக்கால நிவாரணம் என்பது காணாமல்போனவர்களுக்கான இழப் பீடாக அமையாது. இடைக்கால நிவாரணம் வழங்கப்படும்போதும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான உரிய விசாரணைகள் நடாத்தப்படும். 

அதில் எந்தவிதமான மாற்றுக்கருத்துக் களுக்கும் இடமில்லை என்றார்.