SuperTopAds

தாம் சுட்டு படுகொலை செய்த மாணவனுக்கு ஒழுங்கான வீட்டை கூட கொடுக்காத பொலிஸார்..

ஆசிரியர் - Editor I
தாம் சுட்டு படுகொலை செய்த மாணவனுக்கு ஒழுங்கான வீட்டை கூட கொடுக்காத பொலிஸார்..

தம்பியின் மரணத்திற்கு பின்னர் வழங்கப்பட்ட பல வாக்குறுதிகளில் வீடு மாத்திரமே அமைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. குறித்த வீடும்  எமக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையிலேயே காணப்படுகிறது. என கஜனின் சகோதரி கவலை தெரிவித்துள்ளார்

கடந்த 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டி சந்தி  பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த யாழ்.பல்கலைகழக மாணவர்கள் இருவர் மீது பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் கொல்லப்பட்ட  மாணவர்களின் ஒருவரான கிளிநொச்சி பாரதிபுரத்தைச் சேர்ந்த நடராஜா கஜனின் குடும்பத்தினருக்கு மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சினால் 13 இலட்சத்து 50 ரூபா நிதி ஒதுக்கீட்டில் புதிய வீடு ஒன்று அமைக்கப்பட்டு நேற்று (29) புதன்கிழமை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த வீடு இராணுவத்தினரால் அமைத்து வழங்கப்பட்டுள்ளது. அதனால் கட்டுமானப் பணிகளில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன. வீட்டின் அத்திபாரம் கஜனின் தாயார் இரண்டு இலட்சம் ரூபா தனது பணத்தை செலவு செய்து கட்டியது என்றும், அத்தோடு வீட்டின் தூண்கள்  வரையான கட்டுமானப் பணிகளை ஊரில் உள்ள மேசன் ஒருவரை மேற்கொண்டார் எனவும், அதன் பின்னரான கட்டுமானப் பணிகளையே இராணுவத்தினர் மேற்கொண்டனர் என  கஜனின் குடுத்தினர் தெரிவித்துள்ளனர்

கஜனின் தாயாருக்கு அதிகாரிகளின் அழுத்தம் காரணமாகவே வீடு இவ்வாறான ஒரு அமைப்பில் வடிவமைக்கப்பட்டது என்றும் குறிப்பிடுகின்றனர். அத்தோடு வீட்டில் பல பகுதிகள் பூசப்படாது காணப்படுவதோடு, வெடிப்புக்களும் காணப்படுகின்றன. 

மேலும் வீட்டின் நிலம் கூட சீமெந்து கொண்டு சீராக பூசப்படவுமில்லை இதனை தவிர பின் பக்கம் ஜன்னல்களுக்கு கதவுகள் பொருத்தப்படவில்லை இவ்வாறு பல குறைபாடுகள் காணப்படுகின்றன.

சாதரணமாக பொது மக்களுக்கு வீட்டுத்திட்டங்கள் வழங்கப்படுகின்ற எட்டு இலட்சம் ரூபா பெறுமதியான வீடுகளை கூட அவர்கள் மிகவும் நேர்த்தியாக அமைக்கின்ற போது தங்களது வீட்டுக்கு 13 இலட்சத்து 50 ஆயிரம் அரசின் நிதியும் அத்திபாரத்திற்கு எங்களது நிதி இரண்டு இலட்சம் என 15 இலட்சத்து 50 ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது.எனக் குடும்பத்தினர் தெரிவிக்கப்படுகின்றனர்.

எனவே இதன் மூலம் தனது தாயார் ஏமாற்றப்பட்டுவிட்டதாகவும், தம்பியின் மரணத்தின் போது தங்களுக்கு வேலைவாய்ப்பு, வீட்டுத்திட்டம், உட்பட பல உதவிகள் மேற்கொள்ளப்படும் என வாக்குறுதிகள் அளிக்கப்பட்ட போதும் அவை நிறைவேற்றப்படவில்லை வழங்கப்பட்ட வீடும் திருப்தியி்லலை என்றும் கஜனின் சகோதரி தெரிவித்தார்.