SuperTopAds

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் துயரங்களில் பங்காளி ஆகிறோம்..

ஆசிரியர் - Editor I
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் துயரங்களில் பங்காளி ஆகிறோம்..

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினத்தில் தமது உறவுகளை தேடி கொண்டிருக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் இணைந்து காணாமல் ஆக்கப்பட்டவர் கள் தொடர்பான உண்மை நிலையை வெளிப்படுத்துமாறு அரசை நாம் கேட்கிறோம்.

மேற்கண்டவாறு இன்று நடைபெற்ற வடமாகாணசபையின் 130வது அமர்வில் அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கூறியுள்ளார். காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பிரேரணை ஒ ன்றை சபைக்கு கொண்டுவந்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில், சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான விழிப்புணர்வுகளும் கருத்துக்களும் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. 

அந்த வகையில் இந்த நாட்டில் தமிழ் மக்கள் பாரியளவில் காணாமல் போனதும் காணாமல் ஆக்கப்பட்டதுமான துன்பியல் நிகழ்வில் போராடிக் கொ ண்டிருக்கின்ற அத்தகை பாதிக்கப்பட்ட மக்கள் சார்பிலும் அவர்களோடு இந்த சபை இணைந்து

இந்த அரசாங்கம்இந்த விடயத்தில் கூடுதல் கவனம் எடுத்து அவர்களுக்கான தீர்வை வ ழங்குவதற்கான செயற்பாட்டை முன்னெடுக்கவேண்டும் என்ற முன்மொழிவை சபை சார்பில் மு ன்வைக்கின்றேன் என்றார்.

குறித்த பிரேரணை குறித்த பிரேரணை எதிர்ப்புக்கள் ஏதும் இன்றி ஏக மனதாக ஏற்றுக்கொள் ளப்பட்டது.