திண்ம கழிவகற்றும் தொகுதி அமைக்கப்படுவதிலும் இழுபறி..

ஆசிரியர் - Editor I
திண்ம கழிவகற்றும் தொகுதி அமைக்கப்படுவதிலும் இழுபறி..

வடக்கு மாகாணம் யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு யப்பான் அரச உதவியில் ஏற்பாடு செய்யப்படுவதாக கூறப்படும் கவசிமா  திண்மக் கழிவு அகற்றும்  இயந்திரம் பொருத்தப்படுமா இல்லையா என்ற ஐயம் தற்போது ஏற்பட்டுள்ளமை பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூராட்சி அமைச்சின் ஊடாக இலங்கையின் 9 மாகாணங்களிலும் 9 கவசாகி இயந்திரங்களை இந்த ஆண்டுத் மிட்டத்தின் கீழ் பொருத்துவதோடு அடுத்த ஆண்டும் 9 இயந்திரங்களை வழங்க திட்டமிடப்பட்டது. இதன் அடுப்படையில் குறித்த திட்டம் முதன் முதலில் 2014ம் ஆண்டு திட்டமிடப்பட்டது. 

அத்திட்டம் தநார் செய்யப்பட்டவேளையில் வடக்கின் இயந்திரத்தினை 17 சபைகளை உடைய யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு வழங்க எண்ணி பொருத்தமான இடம் தேடப்பட்டது. இந்தக் காலத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிக திண்மக் கழிவுகள் சேரும் சபைகளில் இட வசதி இருக்கவில்லை. இதனையடுத்து ஏனைய சபைகளில் தேடியவேளை கரவெட்டிப் பிரதேச சபையில் இடவசதி இனம் காணப்பட்டது.

குறித்த இயந்திரத்திற்கான இட வசதியை ஏற்படுத்தி பொருத்தும் நிலமை ஏற்பட்டால் அதனை தொடர்ந்தும் இயக்கி தின்மக் கழிவை சீர் செய்யும் பணி தொடர்ச்சியாக இடம்பெற வேண்டுமானால் குறைந்த்து. நாள் ஒன்றிற்கு 50 மெற்றிக்தொன் தின்மக் கழிவுகள் வேண்டும். 

இதற்கமைய கரவெட்டிப் பிரதேச சபை எல்லைப் பரப்பில் பொருத்தப்படும் பொறிக்கான திண்மக் கழிவுகள் கரவெட்டி , பருத்தித்துறை நகர சபை , பருத்தித்துறை பிரதேச சபை , வல்வெட்டித்துறை நகர சபை மற்றும் வலி வடக கு , கிழக்கு சபைகள் என ஆறு சபைகளினதும் கழிவுகளை ஒன்றினைப்பதன் மூலம்

 குறித்த 50 மெற்றிக் தொன் கழிவுகள் கிடைக்கும் இதன் அடிப்படையில் ஆறு சபைகளின் கரிவு அகற்றல் பிரச்சணைக்கு தீர்வும் கிட்டும் என்ற காரணம் முன் வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அத் திட்டம் ஏற்கும் நிலைக்கு வந்தது.

இக் காலப்பகுதியில் யாழ்ப்பாணம் மாநகர சபை கல்லுண்டாய் வெளியில் ஓர் நிலத்தினை தனக்கெனத் தேடியது. இதனால் குறித்த நிலத்தில் அதனை பொறுத்த கோரிக்கை விடுத்தது. இதன்பால் குறித்த இடம் திட்டம் தொடர்பில் மீளாய்விற்கு உட்படுத்தப்பட்டது. 

வடக்கு மாகாணத்தில் உள்ள ஒரேயொரு மாநகர சபையான யாழ்ப்பாணம் மாநகர சபையில் குறித்த இயந்திரத்தினை இயக்குவதற்கான 50 மெற்றிக்தொன் கழிவு தினமும் உண்டா என ஆராய்ந்நவேளையில் யாழ்ப்பாணம் மாநகர சபையில் குறித்த இயந்திரத்தின் இரு இயந்திரத்தினை இயக்கும் அளவிற்கு கழிவுகள் தினமும் சேருவது

 வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் அறிக்கை உறுதி செய்தது.  இதனால் குறித்த இயந்திரத்தினை மாநகர சபை எல்லைப் பரப்பில் பொருத்தி இரு சுற்றாக இயக்கும்போது ஏற்படும் தின்மக் கழிவு பற்றாக் குறைக்கு நல்லூர் மற்றும் மானிப்பாய் சபைகளின் கழிவுகளிற்கும் இடம் வழங்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டது.

இதன் அடிப்படையில் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு வழங்குவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு ( வழங்கப்படவில்லை ) அதற்கான ஏற்பாட்டில் இயந்திரம் பொருத்துவதற்கான கூறுவிலை கோரல் வரை விடயம் நகர்த்தப்பட்டது. இந்த நிலையிலேயே கரவெட்டிப் பி்தேச சபைக்கு குறித்த இயந்திரம் கிடையாது என்ற தகவலை குறித்த சபை அறிந்துகொண்டது. 

இதன் காரணத்தினால் உடனிடியாக கரவெட்டிப் பிரதேச சபை அவசரமாக கூடி குறித்த இயந்திரம் தமது சபைக்கே வழங்கப்பட வேண்டும். எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் தற்போது குறித்த விடயம் தொடர்பில் உள்ளூராட்சி ஆணையாளர் உட்பட வடக்கு மாகாண சபையே ஓர் நெருக்கடியை எதிகொண்டுள்ளது.

இதில் கரவெட்டிப் பிரதேச சபைக்கு வழங்கப்பட்டால் ஆறு சபைகளின் பிரச்சனைக்கு தீர்வு கிட்டும். ஆனால் அங்கே ஆறு சபைகளிலும் சேரும் கழிவுகள் 50 மெற்றிக் தொன்னை தாண்டமாட்டாது. 

இதேநேரம்  யாழ்ப்பாணக் குடாநாட்டின் சகல பகுதி வர்த்தக மையத்தினையும் உள்ளடக்கிய முக்கிய மாநகரப் பகுதியை உள்ளடக்கி உள்ள யாழ்ப்பாணம் மாநகர சபையில் தற்போது தினமும் 80 மெற்றிக் தொன் தின்மக் கழிவுகள் சேருவது ஓர் ஆபத்தான சமிக்கையாகவும் உள்ளது. 

வவுனியா பொருளாதார மையம் , யாழ்ப்பாணம் சொப்பிங் கொம்பிளற்ஸ் , தற்போது கவசிமா திண்மக் கழிவகற்றல் பொறி வடக்கு மாகாணத்தில் அபிவிருத்தி இடம்பெறவே கூடாது எனக் கருதுபவர்கள் காலத்திற்கு காலம் ஏற்படுத்தும் புதுப் புதுச் சர்ச்சைக்குள் நாம் அகப்படுவதே மிச்சமாகவுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு