பக்தர்களைக் கவரும் நல்லைக் கந்தனின் மணல் சிற்பம்!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த மஹோற்சவம் தற்போது நடைபெற்று வருகிறது. திருவிழாவில் தினமும் பெருந்தொகையான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்தநிலையில் ஆலய முன்றலில் உருவாக்கப்பட்டுள்ள முருகனின் மணல் சிற்பம், பக்தர்களை பெரிதும் கவரும் வகையில் உள்ளது. உள்நாட்டு பக்தர்கள் மட்டுமன்றி வெளிநாட்டவர்களும் மிகுந்த ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.