திருகோணமலை சீமெந்து ஆலையில் விபத்து - 23 வயது பணியாளர் உடல் நசுங்கிப் பலி!

திருகோணமலையில் உள்ள மிட்சுயி சீமெந்து தொழிற்சாலையில் இன்று நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 23 வயது பணியாளர் ஒருவர் உயிரிழந்தார்.
சீனக்குடா ஜனசக்திபுரத்தைச் சேர்ந்த அன்டனி ஸ்டீபன் என்பரே இந்த சம்பவத்தில் பலியாகியுள்ளார். இவர்சீமெந்து தொழிற்சாலையில் 4 ஆண்டுகள் கடமை புரிந்துள்ளார்.
புதிதாக கொண்டுவரப்பட்ட இயந்திரத்தில் கப்பலில் இருந்து வரும் சிலிக்கன் மண்ணை ஏற்றி வரும் போது அதிக பாரம் காரணமாக சரிந்த குறித்த இயந்திரத்திற்கு இடையில் சிக்கியதால் குறித்த பணியாளர் இறந்துள்ளார்.