SuperTopAds

ஜரோப்பிய நாடுகளுக்கு செல்லவுள்ள வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே..

ஆசிரியர் - Editor I
ஜரோப்பிய நாடுகளுக்கு செல்லவுள்ள வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே..

புலம்பெயர் தமிழ் உறவுகளை வடக்கு மாகாண அபிவிருத்திக்கு உதவுமாறு அழைப்பு விடுக்கும் வகையில் வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே அடுத்த மாதம் ஆரம்பத்தில் ஐரோப்பிய நாடுகளிற்கான சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

வடக்கு மாகாண அபிவிருத்தியில் புலம் பெயர் தமிழர்கள் ஆற்றக்கூடிய பங்கு அதில் நேரடி முதலீடுகள் அதற்கான அரச வாய்ப்பு , முதலீட்டின் தேவைகள் ஆகியவற்றுடன் தற்போது வடக்கு மாகாணத்தின் தேவை என்பன தொடர்பில் கலந்துரையாடும் வகையில் குறித்த சந்திப்புக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இதற்காக சில புலம்பெயர் உறவுகள் ஏற்கனவே குடாநாட்டிற்கு வந்து வடக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்து கலந்துரையாடி திரும்பியுள்ளனர். அவ்வாறு தாயகம் வந்து சென்றவர்கள் புலம்பெயர் தேசத்தில் மேற்கொள்ளும் சில சந்திப்புக்களில் கலந்துகொண்டு வடக்கு நிலமைகள் தொடர்பில் எடுத்துக் கூறும் ஆளுநர் வடக்கின் அபிவிருத்தியுடன் புலம்பெயர் உறவுகளை அரசின் இணக்க முயற்சிகளிலும் இணைத்துக்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இவ்வாறு பயணம் செய்யும் ஆளுநர் இதற்காக முதலில் பிரித்தானியாவிற்கே பயணம் செய்யவுள்ளார். இவ்வாறு குறித்த திட்டத்திற்காக ஆளுநர் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயண ஒழுங்கினையும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் முன்னர் ஓர் முக்கிய பிரிவின் பொறுப்பாளராகச் செயலாற்றி சமாதான காலத்தில் புலம்பெயர்ந்து சென்ற ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.