இராணுவ ஆக்கிரமிப்பு குறித்து பிழையான தகவல்களே சேகரிக்கப்படுகிறது..

ஆசிரியர் - Editor I
இராணுவ ஆக்கிரமிப்பு குறித்து பிழையான தகவல்களே சேகரிக்கப்படுகிறது..

அயலுறவு அமைச்சர் மாவட்ட ரீதியில் படையினர் பிடியில் உள்ள மக்களின் நிலங்கள் தொடர்பான தகவலைத்  திரட்டும் நிலையில்  வவுனியா  மாவட்டத்தின் ஆயிரக் கணக்கான ஏக்கர் நிலங்கள் மறைக்கப்பட்டுள்ளதாகவே கருதுகின்றோம். 

என தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட தலைவரெம் மாகாண சபை   உறுப்பினருமான வைத்தியக் கலாநிதி ப.சத்தியலிங்கம்  தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் விபரம் தெரிவிக்கையில் ,

ஐ.நா அமர்வு எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் இடம்பெறவுள்ள நிலையில் இலங்கைக்கு வழங்கப்பட்ட கால 2 ஆண்டு கால அவகாசமும்  முடிவுறவுள்ளதனால் வடக்கு கிழக்கில் தமிழர்களின் வாழ்வியலில் அரசு   இயல்பு நிலைகளை ஏற்படுத்தியதாக  பட்டியல் இடவேண்டிய தேவை  உள்ளது. 

இதற்காக தற்போது வடக்கு கிழக்கின் சகல மாவட்டங்களிற்கும் நேரில் பயணிக்கும் அயலுறவு அமைச்சர் மக்களின் வாழ்விடங்கள் எவ்வளவு படையினர் வசம் உள்ளது. என்ற தகவலைத் திரட்டுகின்றார்.

அவ்வாறு  திரட்டப்படும் தகவல்கள் துல்லியமானதாக இருக்க வேண்டும். வவுனியா  மாவட்டத்தில் தற்போது வெறும் 71  ஏக்கரே மக்களிற்குச் சொந்தமான நிலங்கள் படையினர் வசமுள்ளதாக மாவட்ட அரச அதிபர் தலமையில் சகல பிரதேச செயலாளர்களும் விபரம் சமர்ப்பித்துள்ளனர் என எம்மால் அறிய முடிகின்றது. 

அவ்வாறானால் அந்த நிலத்தை படையினர் சமர்ப்பித்தால் இதுவரை வவுனியா  மக்கள் நிலம் தொடர்பில் எழுப்பிய பிரச்சணைகள் அனைத்தையும் தீர்க்க முடியும் என மாவட்டச் செயலாளரினால்  உத்தரவாதம் வழங்க முடியுமா. என்ற கேள்வியை எழுப்ப விரும்முகின்றேன்.

வவுனியா  மாவட்ட மக்களின் வாழ்வியலுடன் தொடர்புபட்ட  நிலங்களில்  18  ஆயிரத்திற்கும் மேற்பட்ட  ஏக்கர் நிலங்கள் படையினரிடம் உண்டு.  அதில் வாழ்விடம்  மக்களின் வாழ்வாதார வயல் நிலங்கள் எத்தனை ஆயிரம் ஏக்கர் நிலம் படையினர் வசமுள்ள நிலையில் மாவட்டச் செயலகம் இந்த தரவினை எங்கிருந்து திரட்டினர் என்ற சந்தேகம் எழுகின்றது. 

மாவட்டத்தின் அபிவிருத்தி நிலம்ல, வாழ் விடம் , வாழ்வாதார நிலம் என அனைத்தும் படை முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றிற்கு எவ்வாறு தீர்வு காண்பது. அதனைவிட அரச திணைக்களங்கள் இயங்கினாலே மக்களின் பணிகளை முன்னெடுக்க முடியும். 

அரச திணைக்களங்களிற்குரிய நிலங்கள் எவ்வளவு படையினர் வசம் உள்ளது. அவற்றினை மாவட்டச் செயலகம் கோரவில்லை என்றால் அவை அனைத்தையும் படையினருக்கு கையளித்து விட்டீர்களா. 

இவ்வாறு இந்தனை பிரச்சணைகளின் மத்தியில் மீள முடியாத இடர்களின் மத்தியில் தவிக்கும் மக்களின் உண்மை நிலையினை மறைத்து அற்ப விபரத்தினை மட்டுமே வெளியிட அரசு முனையும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நேரடியாக  நிச்சயம் உண்மை விபரத்தினை சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லும். 

ஏனெனில் வவுனியா மாவட்டத்தில் தற்போதும் படையினர் வசம் 16 ஆயிரம் ஏக்கர் நிலம் உள்ளது என மாவட்டச் செயலகம் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் எழுத்தில் வழங்கியமைக்கான சான்று ஆவணங்கள் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது என்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு