SuperTopAds

'உயர்ந்த போராளி'க்கு பதிவுத் திருமணம் செய்து வைத்தார் மனோ கணேசன்!

ஆசிரியர் - Admin
'உயர்ந்த போராளி'க்கு பதிவுத் திருமணம் செய்து வைத்தார் மனோ கணேசன்!

மிகவும் உயரமானவரான முன்னாள் போராளி ஒருவருக்கு அமைச்சர் மனோ கணேசன் இன்று முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து வைத்துள்ளார். தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் நடமாடும் சேவை இன்று முல்லைத்தீவில் இடம்பெற்றது.

இதன்போது புனர்வாழ்வளிக்கப்பட்ட உயரமான முன்னாள் போராளி ஒருவருக்கு அமைச்சர் மனோ கணேசன் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து வைத்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ளாமல் அவர் தனது மனைவியுடன் வாழ்ந்து வந்தார். இந்த நிலையிலேயே இன்று சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.