சாரதி தூங்கியதால் கனகராயன்குளத்தில் கவிழ்ந்தது கனரக வாகனம்!

யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கனரக வாகனம் ஒன்று கனகராயன்குளம் கொல்லர்புளியங்குளம் பகுதியில் இன்று அதிகாலை வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகியதில் விபத்துக்குள்ளானதில், சாரதி மற்றும் உதவியாளர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாகனத்தின் சாரதி தூங்கியதே இவ் விபத்துக்கு காரணம் என ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.