கைவிடப்பட்ட கெளதாரிமுனை மக்கள், கண்களை மூடிக்கொள்ளும் அரசியல்வாதிகள்..

ஆசிரியர் - Editor I
கைவிடப்பட்ட கெளதாரிமுனை மக்கள், கண்களை மூடிக்கொள்ளும் அரசியல்வாதிகள்..

கிளிநொச்சி பூநகரி கௌதாரிமுனை கிராமத்தில் வாழ்கின்ற மக்கள் நாளாந்த  போக்குவரத்தில்  பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர். 

பூநகரி யாழ்ப்பாணம் ஏ32 வீதியிலிருந்து  18 கிலோ மீற்றர்கள் தொலைவில் கிராமம் காணப்படுகிறது. 

இந்த கிராமத்திற்கான பேரூந்து சேவை காலை ஏழு மணிக்கு கௌதாரிமுனையிலிருந்து புறப்படும் அரச பேரூந்து பின்னர் வாடியடியிலிருந்து மாலை ஜந்து மணிக்கே கௌதாரிமுனை திரும்புகிறது.

இடைப்பட்ட நேரங்களில்  பொது மக்கள் 18 கிலோ மீற்றர் தூரத்தையும் நடந்தே செல்கின்றனர். 

அதிலும் கைக்குழந்தைகளுடன் செல்பவர்கள், கர்ப்பிணிகள் முதியவர்கள் பாடு பெரும் பாடுதான்.

இந்த 18 கிலோமீற்றர்  தூரத்தை தற்போதைய  காலநிலையில் நடந்து செல்வது பாலை வனத்திற்குள் நடந்து செல்வது போன்றது.

நன்றி:- தமிழ்ச்செல்வன்(ஊடகவியலாளர்)

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு