SuperTopAds

நாயாறு வாடிகள் எரிப்பு விமல் வீரவன்ஸவுக்கு பதிலடி கொடுத்த மனோ கூட்டமைப்பு மெளனம்..

ஆசிரியர் - Editor I
நாயாறு வாடிகள் எரிப்பு விமல் வீரவன்ஸவுக்கு பதிலடி கொடுத்த மனோ கூட்டமைப்பு மெளனம்..

முல்லைத்தீவு நாயாறு பகுதியில் சிங்கள மீனவர்களின் வாடிகள் தீக்கிரையாக்கப்பட்டு அங்கிருந்து சிங்கள மீனவர்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளதாக விமல் வீரவன்ச எம்.பி. கூறியபோது தமிழ்தேசியக் கூட்டமைப்பின் மூத்த உறுப்பினர்கள் வாய்மூடி வேடிக்கை பார்த்த நிலையில் அமைச்சர் மனோகணேசன் விமல்வீரவன்சவுக்கு தக்க பதிலடி கொடுத்தார். 

சிங்கள மீனவர்களின் வாடிகள் தீக்கிரையாக்கப்பட்டு அம்மீனவர்கள் பொலிஸ் பாதுகாப்புடன் வெளியேற்றும் நிலையுள்ளது என்றார்.   

உணர்ச்சிவசப்பட்ட மனோகணேசன் எழுந்து விமல்வீரவன்சவின் குற்றச்சாட்டை நிராகரித்ததுடன் நாயாறில் சிங்கள மீனவர்களின் வாடிகள் தீக்கிரையாக்கப்படவில்லை. தமிழ் மீனவர்களின் வாடிகளையே தீக்கரையாக்கப்பட்டன என்பதை சபையில் தெளிவுபடுத்தினர்.  

அத்துடன் அங்குள்ள மக்களோ மீனவர்களோ இனவாதிகள் அல்ல எனவும் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டு அப்பகுதியில் கடல்வளங்களை சூறையாடுவோரையே அவர்கள் எதிர்ப்பதாகவும் சுட்டிக்காடிய அமைச்சர் மனோகணேசன் இதனை அங்குள்ள பிரதி பொலிஸ்மா அதிகர் மற்றும் பிரதேச செயலர் ஆகியோரும் இதுதொடர்பில் தனக்கு தெளிவுபடுத்தியுள்ளதாகவும் எனவே இதனை இனவாதமான பிரச்சினையாக்கவேண்டாம் என்றார். 

இதனையடுத்து மகிந்த அணியினர் மனோவுடன் கடும் தர்க்கம் புரிந்தனர. அப்போதும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் வாய்திறக்கவில்லை.