50 நாடுகளின் தேர்தல் ஆணையாளர்கள் கலந்து கொள்ளும் கருத்தமர்வு இலங்கையில்..
உலக நாடுகளின் 50 நாடுகளின் தேர்தல்கள் ஆணையாளர்கள் பங்குகொள்ளும் இரு நாள் கருத்தரங்கு இம் மாதம் இறுதியில் இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மகிந்த தேசப்பிரியா தெரிவித்தார்.
குறித்த இரு நாள் கருத்தமர்வு தொடர்பில் நேற்றைய தினம் தேர்தல்கள் செயலகத்தில் அதன் தவிசாளர் மற்றும் உறுப்பினர் இ.கூல் ஆகியோர் தலமையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கே குறித்த விடயம் தொடர்பில் தவிசாளர் மேலும் விபரம் தெரிவிக்கையில் ,
50 நாடுகளின் தேர்தல் ஆணையாளர்களிற்கான விசேட கலந்துரைநாடல் 27 , 28 ஆகிய தினங்களில் கொழும்பு தாய் சமுத்திரா விடுதியில் இடம்பெறவுள்ளது. குறித்த கலந்துரையாடலின் ஆரம்ப நிகழ்வினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
குறித்த கலந்துரையாடல்களில் சிறந்த தேர்தல் நடைமுறைகளைக் கொண்ட நாடுகளான இங்கிலாந்து , கனடா , சுவிஸ் நாடுகள் உள்ளிட்ட 50 நாடுகளின் ஆணையாளர்கள் கலந்துகொண்டு தங்கள் நாடுகளின் அனுபவங்களையும் அதற்கு மேற்கொள்ளக் கூடியதான சீர்திருத்தங்கள் தொடர்பிலும் விளக்கமளிப்பர் எனத் தெரிவித்தார்.