யாழ்.தையிட்டியில் பெளத்த விகாரை, இராணுவ ஒத்துழைப்புடன் பணிகள் ஆரம்பம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.தையிட்டியில் பெளத்த விகாரை, இராணுவ ஒத்துழைப்புடன் பணிகள் ஆரம்பம்..

யுத்தகாலத்தில் அழிவடைந்த காங்கேசன்துறை தையிட்டி திஸ்ஸவிகாரையை மீள்புனர்நிர்மாணம் செய்வதற்கான நிகழ்வு பாதகட விமலஞான தேரர் தலைமையில் நேற்று (22) பிற்பகல் 2மணியளவில் நடைபெற்றது.

இதில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே கலந்து கொண்டு விகாரை அமைவதற்கான அடிக்கல்லினை நாட்டிவைத்தார்.

1946ம் ஆண்டு எழுதப்பட்ட உறுதி அடிப்படையில் பாதகட விமலஞான தேரர் குறித்த விகாரைக்குரிய காணியினை இனங்கண்டு அதனை மீள நிர்மாணிப்பதற்கான பணிகளை ஆரம்பித்துள்ளார்.

குறித்த விகாரை பல நூற்றாண்டுகளாக இப்பகுதியில் இருந்துவந்துள்ளது. 1954.05.17 ம் திகதி இறுதியாக வெசாக் பண்டிகை கொண்டாப்பட்டுள்ளது. 

இதன் பின்னர் நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தினால் குறித்த விகாரை முற்றாக அழிவடைந்திருந்தது. அதனை மீள் நிர்மாணம் செய்யும் பணிக்கான ஆரம்ப வேலை நேற்றயதினம் சுப நேரத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்லில் ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன், பிரதியேக செயலர் ஜே.எம்.சோமசிறி,கிராமசேவையாளர், இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு