SuperTopAds

மகாவலி அதிகாரசபை விடயத்தில் உண்மையை அறிந்து நடவடிக்கை எடுப்பேன்..

ஆசிரியர் - Editor I
மகாவலி அதிகாரசபை விடயத்தில் உண்மையை அறிந்து நடவடிக்கை எடுப்பேன்..

மகாவலி அதிகாரசபை முல்லைத்தீவு மாவட்டத்தில் அடாத்தாக குடியேறியுள்ள மக்களுக்கு காணி உத்தரவு பத்திரங்களை வழங்கியதா? என்பது தொடர்பில் நான் எதனையும் அறியவில்லை. அவ்வாறு நடந்திருந்தால் அதனை நான் தடுத்து நிறுத்துவேன். 

மேற்கண்டவாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கூறியுள்ளார். மயிலிட்டி துறைமுகம் அபிவிருத்திக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கூறிய கருத்து

ஓன்றுக்கு பதிலளிக்கும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மாவை சேனாதிராஜா கூறியதாவது, நானும் எதிர்கட்சி தலைவர் இரா.சம்மந்தனும் ஜனாதிபதியான உங்களை சந்தித்தபோது மகாவலியூடாக தண்ணீரை கொண்டுவருவதற்கு முன்னர் 

சிங்கள மக்களை கொண்டுவந்து குடியேற்றாதீர்கள் என கேட்டிருந்தோம். எங்களுடைய மக்களுக்கு சொந்தமான மண்ணை வேறு யாருக்கும் தாரைவார்க்காதீர்கள் என கேட்டோம். இன்று எங்களுடைய மண்ணில் அடாத்தாக தங்கியுள்ள சிங்கள மக்களுக்கு 

காணி உத்தரவு பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதனை நீங்கள் பொறுப்பாக இருக்கும் மகாவலி அதிகாரசபை வழங்கியுள்ளது. நாங்கள் இப்போதும் கேட்கிறோம் எங்கள் மக்களுக்கு சொந்தமான மண்ணை வேறு யாருக்கும் தாரை வார்க்காதீர்கள். 

என கூறினார். இதற்கு பதிலளித்த ஜனாதிபதி மகாவலி அதிகாரசபை அவ்வாறு காணிகளுக்கான உத்தரவு பத்திரங்களை வழங்கியதாக நான் அறியவில்லை. அப்படி நடந்திருந்தால் அதனை நான் உடனடியாக தடுத்து நிறுத்துவேன். 

இவ்வாறான பிரச்சினைகள் குறித்து நாங்கள் மிகுந்த புரிந்துணர்வுடன் நடந்து கொண்டிருக்கின்றோம். இனிவரும் காலங்களிலும் இவ்வாறன பிரச்சினைகளில் மிகுந்த புரிந்துணர்வுடன் நடந்துகொள்ள தயாராக இருக்கிறோம் என்றார்.