2 வாரங்களுக்குள் மயிலிட்டி மகா வித்தியாலயம் விடுவிக்கப்படும்..

ஆசிரியர் - Editor I
2 வாரங்களுக்குள் மயிலிட்டி மகா வித்தியாலயம் விடுவிக்கப்படும்..

வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தி ற்குள் தற்போதும் இருக்கும் மயிலிட்டி மகாவித்தியாலயம் மற்றும் அதனை சூழ வுள்ள காணிகளை 2 வாரங்களுக்குள் மக்களிடம் மீளவும் வழங்குவேன் என ஜ னாதிபதி மைத்திரிபால சிறிசேனா உறுதி யளித்துள்ளார். 

30 வருடங்களின் பின்னர் மயிலிட்டி துறை முகத்தை புனரமைப்பு செய்வதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று மயிலிட்டி துறைமுகத்தில் இடம்பெற்றது. இதன்போ து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

இதன்போது மேலும் அவர் கூறுகையில், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனா திராஜா வலி,வடக்கில் விடுவிக்கப்படாத காணிகள் குறித்து இங்கே கூறியிருக்கி ன்றார். 2009ம் ஆண்டுக்கு பின்னர் இரா ணுவத்திடம் இருந்த மக்களுடைய காணி களில் 82 வீதமான 

காணிகளை நாங்கள் விடுவித்திருக்கி றோம். மீதமாக 12 வீதமான காணிகளே விடுவிக்கப்படவேண்டியிருக்கிறது. மக்க ளுடைய ஒரு அங்குலம் காணியை கூட இராணுவம் வைத்திரு க்க முடியாது. 

அதனை மக்களிடம் மீள வழங்கவேண்டும். என்ற நிலைப்பாட்டில் நாம் இன்றளவும் உறுதியாகவே இருக்கிறோம். அது வடமா காணம் மட்டுமல்ல இலங்கையில் எந்த பகுதியிலும் மக்களுடைய காணிகளை வைத்திருக்க முடியாது. 

உலக வரலாற்றில் இடம்பெற்ற பாரிய போர்கள் எல்லாம் காணிகளுக்கான போர்களாக இருப்பதை நாங்கள் பார்க்கி றோம். ஆகவே மக்களுடைய காணிகள் மக்களிடம் கொடுக்கப்பட வேண்டும். மே லும் இங்கே நான் வரும்போது மாவை சேனாதிராஜா

மற்றும் விஜயகலா மகேஸ்வரன், அங்கயன் இராமநாதன் போன்றவர்கள் கூறினார்கள் மயிலிட்டி மகாவித்தியா லயம் மற்றும் அதனை சூழவுள்ள கா ணிகள் தொடர்ந்தும் இராணுவத்தின் க ட்டுப்பாட்டில் இருப்பதாக, 

அந்த விடயம் தொடர்பாக இப்போதே யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதியையும், இராணுவ தள பதியையும் அழைத்து பேசி அந்த காணி கள் விடுவிக்கப்படவேண்டியதன் அவசிய த்தை அவர்களுக்கு தெளிவாக கூறியிரு க்கின்றேன். 

அதனடிப்படையில் மயிலிட்டி மகாவித்தி யாலயம் மற்றும் அதனை சூழவுள்ள கா ணிகள் 2 வாரங்களுக்குள் மீள கையளிக்க ப்படும். அதேபோல் மயிலிட்டி துறைமுக த்தை சூழவுள்ள மக்களுடைய காணிக ளும் மிக விரைவாக மக்களிடமே மீள கை யளிக்கப்படும்

என்பதை நான் உறுதியாக கூறுகிறேன் என்றார்

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு