மயிலிட்டி துறைமுக அபிவிருத்திக்கான அடிக்கல் நாட்டினார் ஐனாதிபதி..
மயிலிட்டி துறைமுகம் புனரமைப்பு பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு (2 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று காலை 10 மணிக்கு இடம்பெற்றது.
அடிக்கல்லினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மீன்பிடித்துறை அமைச்சர் விஜித் விஜிதமுனி சொய்ஸா ,
பிரதி அமைச்சர் . பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் . நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் கூரே ஆகியோரால் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது
இதற்கமைய, முதற்கட்டத்தில் 150 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில், நுழைவாயிலை ஆழப்படுத்தல், அலைதடுப்பு நிலையம், குளிரூட்டல் அறைகள் உட்பட்ட அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அத்துடன் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் 30 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில், நிர்வாகக் கட்டிடம், மீன்பிடி வலைகள் பின்னும் நிலையம், நீர்த்தாங்கிகள், கழிவறைகள் என்பன அபிவிருத்தி செய்யப்பட உள்ளன.
இரண்டாம் கட்ட நிதி ஒதுக்கீட்டில் 245 மில்லியன் ரூபாவில், அலைதடுப்பு கட்டுமானத்தின் முழுமையான புனரமைப்பு, ஏலமிடும் நிலையம், நுழைவாயிலை மேலும் ஆழப்படுத்தல் முதலான பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்நிகழ்வில் பெருமளவான மக்கள், மற்றும் வலி.வடக்கு பிரதேச அதிகாரிகள், பொலிஸ்மா அதிபர் , சித்தார்த்தன், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன்,
யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், முப்படைகள் மற்றும் மதத்தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.