வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து 4.2 ஏக்கர் காணி விடுவிப்பு..

ஆசிரியர் - Editor I
வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து 4.2 ஏக்கர் காணி விடுவிப்பு..

வலிகாமம் வடக்கு காங்கேசன்துறை மத்தி  ஜே/234 கிராமசேவையாளர் பிரிவில் உள்ள 4.2 ஏக்கர் நிலப்பரப்பு இன்று இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்து 28 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டது. 

இதற்கான நிகழ்வு மாலை 3 மணிக்கு  இன்று விடுவிக்கப்பட்ட காங்கேசன்துறை ரயில் நிலையத்திற்கு அண்மையில்  இடம்பெற்றது. 

இதன்படி விடுவிக்கப்பட்ட  நிலப்பத்திரம் உத்தியோகபூர்வமாக  யாழ்.மாவட்ட இராணுவக்  தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியினால் யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகனிடம் கையளிக்கப்பட்டது. 

விடுவிக்கப்பட்ட காணிகளில் உள்ள வீடுகள் இப்பிலிப்பிலி மரங்கள், புள்ளு பற்றைகள் சூழ்ந்துள்ளதுடன் உள் பகுதிக்குள் செல்லமுடியாதுள்ளது. மேலும்  வீடுகள் இடிக்கப்பட்டும் காணப்படுகின்றன.  

சிலரது காணிகள் விடுவிக்கப்படாத நிலையில் தங்களது காணிகளை விரைவில் விடுவிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஊடகங்களுக்கு மக்கள் கருத்து தெரிவித்தனர். 

 இந்நிகழ்வில் பொதுமக்கள்,  யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன்,   வலி.வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலர் ச.சிவசிறி, யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி, 

மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி,  51 ஆவது படையணியின் படைத் தளபதி ரொசான் செனவிரட்ன என இராணுவ அதிகாரிகளும் பங்கேற்றனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு