கொக்குவில் பகுதியில் வாள்வெட்டு, பொலிஸாரின் கருத்தை பொய்யாக்கியது..

ஆசிரியர் - Editor I
கொக்குவில் பகுதியில் வாள்வெட்டு, பொலிஸாரின் கருத்தை பொய்யாக்கியது..

யாழில்.வன்முறைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டோம் என வடமாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் ஊடகங்களுக்கு அறிவித்த மறுநாள் கொக்குவிலில் வாள் வெட்டு குழு வீடு புகுந்து வன்முறையில் ஈடுபட்டு உள்ளது. 

கொக்குவில் சம்பியன் ஒழுங்கையில் வசிக்கும் வைத்தியர் ஒருவரின் வீட்டுக்குள் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை புகுந்த வாள் வெட்டு குழு வன்முறையில் ஈடுபட்டு உள்ளது. 

மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த ஆறுக்கும் மேற்பட்ட நபர்கள் முகங்களை மறைத்து கட்டியவாறு வீட்டுக்குள் புகுந்து வீட்டின் யன்னல் கண்ணாடிகள் , பொருட்கள் என்பவற்றை அடித்து உடைத்து சேதப்படுத்திய பின்னர் தப்பி சென்றுள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்தனர். 

இதேவேளை கடந்த சனிக்கிழமை யாழில் ஊடகவியலாளர்களை சந்தித்த வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெனர்ண்டோ , வாள் வெட்டு குழுக்களின் 

வன்முறைகளை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம் என தெரிவித்து இருந்த நிலையில் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை வாள் வெட்டு குழு வன்முறையில் ஈடுபட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு