SuperTopAds

நாயாறு மக்களுக்கு உலர் உணவு பொருட்களை வழங்கிய யாழ்.வணிகர் கழகம்..

ஆசிரியர் - Editor I
நாயாறு மக்களுக்கு உலர் உணவு பொருட்களை வழங்கிய யாழ்.வணிகர் கழகம்..

யாழ்ப்பாணம் வர்த்தக சங்கம் வழங்கிய உணவுப் பொருட்களை நாயாற்று மீனவர்களிடம் சேர்ப்பித்தார் ரவிகரன்.

நாயாற்றில் வாடி எரிக்கப்பட்டு பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு யாழ்ப்பாணம் வர்த்தக சங்கம் உணவுப் பொருட்களை வழங்கியுள்ளது.

குறித்த உணவுப் பொருட்களை வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனிடம் யாழ்ப்பாணம் வர்த்தக சங்கத்தினர் வழங்கியிருந்தனர்.

வர்த்தக சங்கத்தால் வழங்கப்பட்ட உணவுப் பொருட்கள் ரவிகரன்  பாதிக்கப்பட்ட மக்களிடம் இன்று கையளித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் அறியவருகையில்.

கடந்த 13.08.2018(திங்கள்) அன்று சில விசமிகளால் முல்லைத்தீவு – நாயாற்றுப் பகுதியில் அமைந்துள்ள தமிழ் மீனவர்களின் எட்டு வாடிகள் எரிக்கப்பட்டன.

இதனால் அந்த மீனவர்கள் தமது பெருமளவான சொத்துக்களை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு யாழ்ப்பாணம் வர்த்தக சங்கத்தினர் உணவுப் பொருட்களை வழங்க முன்வந்தனர்.

அதனடிப்படையில் அரிசி 205கிலோ, பருப்பு 100கிலோ, பால்மா 36பெட்டிகள்,

சோயாமீட்ஸ் 10கிலோ, மரக்கறி எண்ணெய் 20லீற்றர், தேயிலை 2கிலோ, சீனி 25கிலோ ஆகிய உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

மேலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் சார்பாக முல்லைத்தீவு மாவட்ட

வடமாகாணசபை உறுப்பினர்  துரைராசா - ரவிகரனிடம் யாழ்ப்பாண வர்த்தக சங்கத்தினர் குறித்த உணவுப் பொருட்களை வழங்கியிருந்தனர்.

இந் நிலையில் 2018.08.19(ஞாயிறு) இன்றைய நாள், நாயாறு கிராமிய கடற்றொழில் அமைப்பு பொது நோக்கு மண்டகத்தில் வைத்து ரவிகரன்  பாதிக்கப்பட்ட நாயாற்று மீனவர்களிடம் குறித்த உணவுப் பொருட்கள் சேர்ப்பித்தார்.

அத்துடன் பாதிக்கப்பட்ட மீனவர்களாலும், வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனாலும் குறித்த கையளிப்பு நிகழ்வில் யாழ்ப்பாண வர்த்தக சங்கத்தினருக்கு நன்றிகளும் வாழ்த்துதல்களும் தெரிவிக்கப்பட்டது.