SuperTopAds

ஐ.நாவில் பொய்களை அவிழ்த்து விடுவதற்காக பொய்யான தரவுகள் சேகரிக்கப்படுகிறது..

ஆசிரியர் - Editor I
ஐ.நாவில் பொய்களை அவிழ்த்து விடுவதற்காக பொய்யான தரவுகள் சேகரிக்கப்படுகிறது..

ஐ.நாவில் பொய்களை அவிழ்த்து விடுவதற் காக வெளியுறவுத்துறை அமைச்சர் வடக்கி லுள்ள சகல மாவட்டங்களுக்கும் சென்று இ ராணுவத்திடம் உள்ள மக்களின் காணிகள் குறித்த தகவல்களை சேகரித்து வருகிறார்.

இந்த தகவல் சேகரிப்பு வேலை திட்டத்தில் இராணுவத்திடம் உள்ள காணிகள் குறித்த உண்மையான தரவுகள் கூறப்படவில்லை. என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளும ன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறீஸ்கந்த ராசா கூறியுள்ளார்.

இது தொடர்பில்  நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் விபரம் தெரிவிக்கையில் ,

ஐ.நா அமர்வு எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் இடம்பெறவுள்ள நிலையில் இலங்கைக்கு வழங்கப்பட்ட கால 2 ஆண்டு கால அவகாசமும்  முடிவுறவுள்ளதனால் வடக்கு கிழக்கில் தமிழர்களின் வாழ்வியலில் ஏற்படுத்திய இயல்பு நிலைகளை ஏற்படுத்தியதாக  பட்டியல் இடவேண்டிய நிலமை அரசிற்கு உள்ளது. 

இதற்காக தற்போது வடக்கு கிழக்கின் சகல மாவட்டங்களிற்கும் நேரில் பயணிக்கும் அயலுறவு அமைச்சர் மக்களின் வாழ்விடங்கள் எவ்வளவு படையினர் வசம் உள்ளது. என்ற தகவலைத் திரட்டுகின்றார். தகவலைந் திரட்டுவது தவறு அல்ல. 

திரட்டப்படும் தகவல்கள் துல்லியமானதாக இருக்க வேண்டும். முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது ஆயிரம் ஏக்கரே மக்களிற்குச் சொந்தமான நிலங்கள் படையினர் வசமுள்ளதாக மாவட்ட அரச அதிபர் தலமையில் சகல பிரதேச செயலாளர்களும் விபரம் சமர்ப்பித்துள்ளனர். 

அவ்வாறானால் அந்த ஆயிரம் ஏக்கரையும் படையினர் சமர்ப்பித்தால் இதுவரை முல்லைத்தீவு மக்கள் நிலம் தொடர்பில் எழுப்பிய பிரச்சணைகள் அனைத்தையும் தீர்க்க முடியும் என மாவட்ட அரஞ அதிபரால் உத்தரவாதம் வழங்க முடியுமா?

நிச்சமாக முடியாது ஏனெனில் முல்லைத்தீவு மாவட்ட மக்களின் வாழ்விட நிலங்களின் அளவு மட்டுமே இந்த ஆயிரத்திற்கும் உட்பட்ட 991 ஏக்கர் நிலங்கள் அதேபோன்று மக களின் வாழ்வாதார வயல் நிலங்கள் எத்தனை ஆயிரம் ஏக்கர் நிலம் படையினர் வசமுள்ளது. 

அதேபோன்று வயல் செய்கைக்குரிய 8 குளங்கள் படையினரின் பிடியிலேயே இன்றும் உள்ளது. இதனைவிடக் கொடுமையானது. மக்கள் வாழும்போதும் நின்மதி இல்லை இறந்ராலும் முல்லைத்தீவில் நின்மதியாக போகமுடியாது என்பதனை எடுத்தியம்பும் வகையில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஓர் சுடலையை இராணுவம் அபகரித்துள்ளது.

இதனைபோன்று இரு  வாழ்வாதாரக் குளத்தினை மூடிப் படை முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றிற்கு எவ்வாறு தீர்வு காண்பது. அதனைவிட அரச திணைக்களங்கள் இயங்கினாலே மக்களின் பணிகளை முன்னெடுக்க முடியும். அரச திணைக்களங்களிற்குரிய நிலங்கள் எவ்வளவு படையினர் வசம் உள்ளது. 

அவற்றினை மாவட்டச் செயலகம் கோரவில்லை என்றால் அவை அனைத்தையும் படையினருக்கு கையளித்து விட்டீர்களா.  இவ்வாறு இந்தனை பிரச்சணைகளின் மத்தியில் மீள முடியாத இடர்களின் மத்தியில் தவிக்கும் மக்களின் உண்மை நிலையினை மறைத்து 

அற்ப விபரத்தினை மட்டுமே வெளியிட அரசு முனையும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிச்சயம் உண்மை விபரத்தினை சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லும் என்றார்.