சட்டத்தை மீறி கடலட்டை பிடித்த தென்னிலங்கை மீனவர்களை விடுதலை செய்த அதிகாரிகள்..

ஆசிரியர் - Editor I
சட்டத்தை மீறி கடலட்டை பிடித்த தென்னிலங்கை மீனவர்களை விடுதலை செய்த அதிகாரிகள்..

யாழ்.நாகர்கோவில் பகுயில் சட்டவிரோதமாக இரவில் கடலட்டை பிடித்த 21 படகுகள் மற்றும் 81 தென்பகுதி மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் யாழ்.மாவட்ட கடற்றொழில் திணைக்களம் குறித்த மீனவர்களை விடுவித்துள்ளது.

இரவில் கடலட்டை பிடிக்க கூடாது என்பது சட்டமாக உள்ள நிலையில் நாகர்கோவில் கடற்பகுதியில் இன்று அதிகாலை வெளிச்சம் பாய்ச்சி கடலட்டை பிடித்த தென்னிலங்கை மீனவர்களை கடற்படை கைது செய்தது.

பின்னர் குறித்த மீனவர்கள் பருத்துறை குறித்த மீனவர்கள் பருத்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களம் தலையிட்டு இரவில் கடலட்டை பிடிக்க அனுமதி உள்ளதாக கூறியுள்ளது.

இதனையடுத்து கடற்படை குறித்த மீனவர்களை விடுதலை செய்துள்ளது. இதனையடுத்து நாகர்கோவில் மீனவர்கள் கடற்படை முகாமிற்கு சென்று தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து மக்களுடன் பேசிய கடற்படை அதிகாரிகள்

தாம் கடற்றொழில் நீரியல்வள திணைக்களத்தின் ஒப்புதலின் பெயரிலேயே தாம் மீனவர்களை விடுதலை செய்துள்ளதாகவும் தென்னிலங்கை மீனவர்கள் சட்டத்தை மீறவில்லை. என கூறியதாலேயே தாம் விடுதலை செய்துள்ளதாகவும் கூறினர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு