SuperTopAds

வடகிழக்கில் 522 ஏக்கர் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்படும்..

ஆசிரியர் - Editor I
வடகிழக்கில் 522 ஏக்கர் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்படும்..

இராணுவத்தினரால் விரைவில் விடுவிக்கப்படவுள்ள 522 ஏக்கர் காணிப்பரப்பில் 80 சதவீதமான காணிகள் வடமாகாணத்துக்குரியவை என இராணுவப் பேச்சாளர்  தெரிவித்தார்.

வடக்கு கிழக்கில் காணிவிடுவிப்பு தொடர்பில் இராணுவப் பேச்சாளர் சுமித் அத்தப்பத்துவிடம் வினாவிய போது அவர் தெரிவிக்கையில் வடக்கு கிழக்கில் இராணுவக்கட்டுப்பாட்டில் உள்ள 522 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கான 

ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில் அங்குள்ள இராணுவ முகாம்களை அகற்றகோரப்பட்ட நிதியின் ஒருபகுதி கிடைக்கப்பெற்றுள்ளது. எஞ்சிய பகுதிக்கான அங்கீகாரம் விரைவில் கிடைத்த பின்னர் 

அந்தக் காணிகள் விடுவிக்கப்படும், எனினம் இதற்கு ஆறு மாதங்கள் வரையில் செல்லலாம் எனவும் தெரிவித்தார். இதேவேளை எதிர்வரும் 21 ஆம் திகதி தெல்லிப்பளையில் இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தில் 4.7 ஏக்கர் 

நிலப்பரப்பு காணி விடுவிக்கப்படவுள்ளது. 51.1 படைப்பிரிவனரால் பயன்படுத்தப்பட்ட காணிகளே விடுவிக்கப்படவுள்ளது. இதேநேரம் இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் வணிக ரீதியான சொத்துக்களை 

விடுவிப்பதற்கு இன்னும் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை. வடக்கு கிழக்கில் இராணுவத்தினரால் வர்த்தக நடவடிக்கைகளால் முன்னெடுக்கப்படும் நிலையில் அவை பொதுமக்களுக்கு சொந்தமாக இருந்தால் அவற்றை 

விடுவிக்கப்படுமா என  அவரிடம் வினாவியபோது பதில் வழங்கிய அவர் அதுகுறித்து இன்னும் ஆலோசனை நடத்தப்படவில்லை என கூறினார்.

வடக்கில் முன்னெடுக்கப்படுகின்ற நிலக்கண்ணிவெடி அகற்றும் பணிகளில் 94 வீதமானவை நிறைவுசெய்யப்பட்டுள்ளது. எஞ்சிய பணிகளை 2020 இற்கும் நிறைவு செய்யப்படும் இவற்றில் 74 சதவீதமான பணிகள் இராணுவத்தினராலேயே 

முன்னெடுக்கப்பட்டதாகவும் இராணுவப் பேச்சாளர் சுமித் அத்தப்பத்து தெரிவித்தார்.