SuperTopAds

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் மகற்பேற்று பிரிவு முடக்க நிலையில்..

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் மகற்பேற்று பிரிவு முடக்க நிலையில்..

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் பெண் நோயியல் மகப்பேற்று மருத்துவர்கள் இல்லாத நிலையில் பிரசவகத்திற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் தாய்மாரை எந்த அடிப்படையும் இல்லாத முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு மாற்றுவது குறித்து கடும் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கிளிநொச்சி மாவட்டத்தில் வாழும் சுமார் ஒன்றரை இலட்சம் மக்களுக்கும் ஏனைய அயல் மாவட்டமான முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பல ஆயிரக்கணக்கான மக்களனிது மருத்துவத்தேவைகளைப்பூர்த்தி செய்கின்ற வைத்தியசாலையாக காணப்படுகின்ற 

கிளிநொச்சி மாவட்ட பொதுவைத்தியசாலையின் ஆளணி மற்றும் பௌதீக வளங்களை உரிய முறையில வழங்க இது வரை மத்திய அரசு எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்காது வைததியசாலையில் இருக்கின்ற ஆளணி வளங்களை திட்டமிட்டு வேறு வைத்தியசாலைக்கு இடமாற்;றம் செய்து வருகின்றது.

இதனால் இங்குள்ள மக்கள் மருத்துவ்தேவையை நிறைவு செய்யமுடியாது பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாகவே கிளிநொச்சி மாவட்டபொதுவைத்தியசாலையில் கடமையாற்றிய இரண்டு பெண்நோயியல் மகப்பேற்று வைத்திய நிபுணர்களில் ஒருவரை மத்திய சுகாதார அமைச்சு 

பொலனறுவைப்பிரதேசத்திற்கு இடமாற்றம் செய்ததுடன் அந்த வெற்றிடத்திற்கு  அடுத்த மாதம்  வெளிநாடு ஒன்றிற்கு  மேலதிகமருத்துவக்கற்கைக்குசெல்லும் தாதியர் ஒருவரை நியமித்திருந்தது.  குறித்த வைத்தியர் வெளிநாடுசெல்வதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்கும்பொருட்டு விடுமுறையில் சென்றுள்ளார்.

இதேவேளை ஏற்கனவே கடமையில் இருந்து மற்றைய வைத்தியரும் கடமைக்கு சமுகம் அளிக்காத நிலையில்  நேற்று முன்தினம் முதல் கிளிநொச்சி வைத்தியசாலையில் மகப்;பேற்றுக்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணித்தாய்மார் அவசர சிகிச்சைப்பிரிவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளே இல்லாத முல்லைத்தீவு பொதுவைத்தயிவாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இவ்வாறான செயற்பாடுகளால் இவ்வைத்திய சாலையில் முதன்முறையாக நியமிக்கப்படடுள்ள உள்ளக பயிற்சி மருத்துவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு கிளிநொச்சி பொதுவைத்தியசாலைக்கான வைத்திய நிபுணர்களையும் வைத்தியர்கள் மற்றும் ஆளணி வளங்களை நிரப்புவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டி வருவதுடன் 

இங்கிருக்கின்ற வளங்களையும் குறைப்பதற்கான வேலைகளை திரைமறைவில் மேற்கொண்டு வருகின்றது என பல்வேறு தரப்புக்ககுளும் சுட்டிக்காட்டியுள்ளன கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக மன்னார் பொதுவைத்தியசாலையில் மகப்பேற்று நிபுணர் இல்லாத நிலை காணப்பட்டது போன்ற ஒரு நிலமை கிளிநொச்சி 

மாவட்டப்பொதுவைத்தியசாலைக்கும் ஏற்படும் அபாயநிலை காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டது. இவ்விடயம் தொடர்பில்மத்திய சுகாதார அமைச்சு  மற்றும்மாகான சுகாதார அமைச்சு என்பன உரிய நடவடிக்கை எடுக்கவவேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.