வீதியின் நடுவே தென்னங்கன்று நடும் இராணுவம், வேடிக்கை பார்க்கும் அரச அதிகாரிகள்..

ஆசிரியர் - Editor I
வீதியின் நடுவே தென்னங்கன்று நடும் இராணுவம், வேடிக்கை பார்க்கும் அரச அதிகாரிகள்..

வலி. வடக்குப் பிரதேசத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான பிரமான வீதிகளில் ஒன்றான கட்டுவன் மயிலிட்டி வீதியின் நடுப் பகுதியில் படையினர்  தென்னங்கன்றுகளை நாட்டுகின்றனர்.

வலி . வடக்குப் பகுதியில் கடந்த 2018-04-13 அன்று படையினரால் விடுவிக்கப்பட்ட 643 ஏக்கரில் கட்டுவன் , மயிலிட்டிப் பிரதேசங்களில் மயிலிட்டி கட்டுவன் வீதியின் ஒரு பகுதி விடுவிக்கப்பட்டபோதிலும் மேலும் சிறு பகுதி படையினரின் பிடியிலேயே கானப்பட்டது. 

இவ்வாறு படையினரின் பிடியில் காணப்படும் வீதிக்குரிய பிரதேசங்களிற்கான போக்குவரத்து இன்றுவரையில் தனியார் காணிகளின் ஊடாகவே இடம்பெறுகின்றது.

இவ்வாறு படையினர் அபகரித்துள்ள வீதியினை விடுவிக்குமாறு விடப்பட்ட கோரிக்கையின் பெயரில் குறித்த வீதி முழுமையாக விடுவிக்கப்படும் என முன்னர் வாக்குறுதி வழங்கப்பட்டது . 

இருப்பினும் சுமார் 200 மீற்றர் நீள வீதிப் பிரதேசத்தில் உள்ள ஓர் வளைவினைப் பயன்படுத்திய படையினர் 40 அடி தூரத்திற்கும் உட்பட்ட பகுதியை அபகரித்துள்ளனர்.

இவ்வாறு 40 அடி தூரத்திற்கும் உட்பட்ட 200 மீற்றர் பிரதேசமானது 3 ஏக்கர் நிலப்பரப்பிற்கும் குறைவான பிரதேசங்கள் படையினரிடம் இருந்து விடுவிக்கப்பட்டால் பி- 171 இலக்க வீதியானது முழுமையாக விடுவிக்கப்படும்.

ஆனால் தற்போது விடுவிக்கப்பட்ட பலரின் நிலத்திற்கான போக்குவரத்து மார்க்கம் இன்றியே கானப்படுவதோடு பலரின் வீட்டுப் பாவனைக்கான கிணறுகள் வீட்டிற்குச் செல்லும் பாலங்கள் படையினரால் அபகரித்துள்ள 3 ஏக்கர் நிலத்திற்குள் அகப்பட்டுள்ளது.

இவ்வாறு கானப்படும் மக்களின் நிலமும் வீதியுமான 3 ஏக்கர் நிலப்பரப்பில் பழைய வீதியினை டோசர் மூலம் உழுது நடுவீதியில் படையினர் தென்னச் செய்கை மேற்பொள்கின்றனர். 

இதேநேரம் குறித்த வீதியானது வடக்குத் தெற்கு நோக்கியுள்ள குறித்த வீதியின் மேற்குத் திசை முழுமையாக விடுவிக்கப்பட்டபோதும் கிழக்குத் திசை படையினரின் பாதுகாப்பு வேலிக்குள் அகப்பட்டுள்ளது.

இவ் வீதியின் மேற்குத் திசையில் பாரிய வெள்ள வாய்க்கால் ஒன்றும் கானப்பட்டது.  தற்போது படையினர் வீதியின் சிறு பகுதியையும் வாய்க்காலையும் ஆக்கிரமித்துள்ள நிலையில் விடுவிக்கப்பட்ட நிலத்திலும் எந்தவிதமான புனரமைப்பையும் மேற்கொள்ள முடியாது அப்பகுதி நில உரிமையாளர்கள் திணறுகின்றனர். 

எனவே வெள்ள வாய்க்கால் , வீதி என அபகரித்துள்ள சிறு பகுதியான 3 ஏக்கர் நிலப்பரப்பினை படையினரிடம் இருந்து விடுவிக்க உரியவர்கள் ஆவண செய்ய வேண்டும் என அப்பகுதி நில உரிமையாளர்கள் கோரிக்கை விடுப்பதோடு 

பொது மக்கள் வீதிக்கு அண்மையாக கட்டிடத்தை கட்டும்போது தடை செய்யும் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் படையினர் நடு வீதியில் தென்னை நடும்போது மட்டும் வாய் மூடி மௌனிகளாக இருப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு