SuperTopAds

தமிழ் மீனவர்களின் வாடிகள் எரிப்பு, 3 சிங்கள மீனவர்கள் கைது..(PHOTOS)

ஆசிரியர் - Editor I
தமிழ் மீனவர்களின் வாடிகள் எரிப்பு, 3 சிங்கள மீனவர்கள் கைது..(PHOTOS)

முல்லைத்தீவு- நாயாறு பகுதியில் தமிழ் மீனவர்களுடைய வாடிகளுக்கு தீ வைக்கப்பட்ட சம் பவத்துடன் தொடர்புடைய 3 சிங்கள மீனவர்கள் இன்று மதியம் முல்லைத்தீவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நாயாறு இறங்குதுறை பகுதியில் அமைந்திருந்த தமிழ் மீனவர்களுக்கு சொந்தமான 8 வாடிகள் நேற்று இரவு 10.30 மணியளவில் விஷமிகளால் தீ வைத்து கொழுத்தப்பட்டது. இதனால் வடிகள் முழுமையாக எரிந்துள்ளதுடன், 

உத்தேச மதிப்பீட்டின் படி 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடற்றொழில் உபகரணங்கள் அழி க்கப்பட்டிருக்கின்றது. இந்த நாசகார செயல் தொடர்பாக மக்கள் நேற்று முன்தினம் இரவு தொடக்கம் முறைப்பாடு கொடுப்பதற்கு முயற்சித்தபோதும், 

பொலிஸார் முறைப்பாட்டை ஏற்கவில்லை. என கூறும் பாதிக்கப்பட்ட தமிழ் மீனவர்கள். இன்று காலை 10 மணிவரை சம்பவ இடத்திற்கு பொலிஸார் வரவில்லை. பின்னர் மக்கள் குழ ப்படைந்து சட்டத்தை மீறும் அளவுக்கு நிலமை சென்றதன் பின்னரே 

பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்ததுடன் முறைப்பாட்டையும் ஏற்றுக் கொண்டனர். இதனடி ப்படையில் மதியம் 1.3 0 மணியளவிலேயே சந்தேக நபர்கள் 3 பேர் கைது செய்யப்பட் டனர். அவர்கள் வென்னப்புவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள். 

இதன் பின்னரும் பொலிஸார் இந்த விடத்தை சமாளிப்பதற்கான முயற்சிகளை தொடர்ந்து எடுத்துக் கொண்டிருந்த நிலையில் மக்களுடையதும், அரசியல்வாதிகளுடையதும் அழுத்தம் காரணமாக நேற்று மாலை வரை இரு தரப்பிடமும் வாக்குமூலங்களை பதிவு செய்தனர் 

எனவும் மக்கள் கூறுகின்றனர். இதேவேளை நாயாறு இறங்குதுறையில் 2012ம் ஆண்டு தொடக்கம் சுமார் 40 ற்கும் மேற்பட்ட படகுகளை வைத்த தென்னிலங்கையை சேர்ந்த ஒருவர் சட்டவிரோத தொழிலை செய்து வருகின்றார். 

இதனால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டதாக கூறும் நாயாறு பிரதேச மக்கள், குறித்த தென்னிலங்கை மீனவரை நாயாறு இறங்குதுறை பகுதியில் இருந்து அகற்றவேண்டும். என தாம் பொலிஸாரிடம் கோரிக்கை முன்வைத்த நிலையில் அதனை பொலிஸார் ஏற்றுக் 

கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ள தாகவும் கூறினர்.