‘இலங்கைத் தமிழர் ஒரு சுருக்க வரலாறு’ மற்றும் ‘ஈழத்தமிழர் மரபுரிமை அடையாளங்கள்’ ஆகிய நூல்களின் அறிமுக விழா

ஆசிரியர் - Admin
‘இலங்கைத் தமிழர் ஒரு சுருக்க வரலாறு’ மற்றும் ‘ஈழத்தமிழர் மரபுரிமை அடையாளங்கள்’ ஆகிய நூல்களின் அறிமுக விழா

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறைத் தலைவர் மற்றும் பணிப்பாளர், மத்திய கலாசார நிதியம், யாழ்ப்பாணம் - சிரேஷ்ட பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் அவர்களின் ‘இலங்கைத் தமிழர் ஒரு சுருக்க வரலாறு’ மற்றும் ‘ஈழத்தமிழர் மரபுரிமை அடையாளங்கள்’ ஆகிய நூல்களின் அறிமுக விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (19.08.2018) மாலை 5.00 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்கம் உருத்ரா மாவத்தை கொழும்பு - 06 இல், சி.தில்லைநாதன் - வாழ்நாள் பேராசிரியர் பேராதனைப் பல்கலைக்கழகம் தலைமையில் நடைபெறவுள்ளது.

தனது தொல்லியல் கண்டுபிடிப்புக்கள் மூலம் ஈழத்தமிழர் வரலாறு, பண்பாடு, தமிழர் மரபுரிமை தொடர்பான விடயங்களை முதன்மைப்படுத்தி தமிழரின் இருப்பு பற்றிய விடயங்களை அறிவியல் சார்ந்தும், தொல்லியல் ஆய்வுகள் முன்வைத்த முடிவுகள் சார்ந்தும் ‘இலங்கைத் தமிழர் ஒரு சுருக்க வரலாறு’ என்ற நூலையும், ஈழம் சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து ஈழத்தமிழரின் மறைந்து போகும் மரபுரிமைச் சின்னங்களைப் பாதுகாத்து, ஆவணப்படுத்துவது தொடர்பாக ‘ஈழத்தமிழர் மரபுரிமை அடையாளங்கள்’ என்ற நூலையும் ஆக்கியுள்ளார்.

இவ் இரு நூல்களின் அறிமுக விழாவில் கலந்து கொள்ளுமாறு அனைவரையும் அன்பு அழைக்கிறார்கள் கொழும்பு தமிழ்ச்சங்கத்தினர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு