முல்லைத்தீவு- நாயாறு பகுதியில் பதற்றம், தமிழ் மீனவர்களின் வாடிகளுக்கு தீ வைப்பு..

ஆசிரியர் - Editor I
முல்லைத்தீவு- நாயாறு பகுதியில் பதற்றம், தமிழ் மீனவர்களின் வாடிகளுக்கு தீ வைப்பு..

முல்லைத்தீவு நாயாறு பகுதியில் தமிழ் மீனவர்களுக்கு சொந்தமான 8 வாடிகள் எரிக்கப்பட்டுள்ள நிலையில் நாயாறு பகுதியில் பெருமளவு பொலிஸார் மற்றும் இராணுவம் குவிக்கப்பட்டு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

முல்லைத்தீவில் சட்டவிரோத கடற்றொழில் நிறுத்தப்படும் என மத்திய கடற்றொழில் அமைச்சர் கூறி சில நாட்கள் கூட ஆகாத நிலையில் நேற்று மாலை நாயாறு பகுதியில் தங்கியிருக்கும் சிங்கள மீனவர்கள் சட்டவிரோத தொழில்களை செய்ய முயற்சித்தனர்.

இதனை தமிழ் மீனவர்கள் தடுத்து நிறுத்தியிருந்த நிலையில் நேற்று இரவு 10.30 மணியளவில் நாயாறு பகுதியில் இருந்த தமிழ் மீனவர்களுக்கு சொந்தமான சுமார் 8 வாடிகள் தீயிட்டு கொழுத்தப்பட்டது.

இதனுடன் 3 படகு இயந்திரங்கள் உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் பெறுமதியான கடற்றொழில் உபகரணங்களும் அழிக்கப்பட்டள்ளது. இதனையடுத்து மிகுந்த போராட்டத்தின் மத்தியில் மக்கள் தீயை அணைத்தனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு பொலிஸார் மற்றும் படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டனர். இருந்தும் நாயாறு பகுதியில் 12 மணி தாண்டியும் பதற்றமான சூழல் நிலவியது. மேலும் வாடிகளுக்கு சொந்தக்காரர் களான தமிழ் மீனவர்களின் முறைப்பாட்டினை நள்ளிரவு தாண்டியும் பொலிஸார் எடுக்கவில்லை.


மேலதிக விவரங்கள் விரைவில்…அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள யாழ்ப்பாணவலயம்.கொம் செய்திச்சேவையுடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள் JaffnaZone.com

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு