SuperTopAds

வெடுக்குநாறி மலைக்கு செல்ல தொல்லியல் திணைக்களம் அனுமதி..

ஆசிரியர் - Editor I
வெடுக்குநாறி மலைக்கு செல்ல தொல்லியல் திணைக்களம் அனுமதி..

நெடுங்கேணி- ஒலுமடு வெடுக்குநாறி மலைக்கும் அங்குள்ள ஆதி ஜயனார் ஆலயத்திற்கும் செல்லகூடாதென தொல்லியல் திணைக்களம் வழங்கியிருந்த உத் தரவை தொல்லியல் திணைக்களம் நிபந்தனைகளுடன் தளர்த்தியுள்ளது.

ஒலுமடு கிராமத்தில் உள்ள வெடுக்குநாறி மலை மாற்றும் அங்குள்ள ஆதி ஜயனார் ஆலயம் ஆகியன தமது கட்டுப்பாட்டுக்குள் வருவதாக கடந்த 10ம் திகதி அறிவி த்த தொல்லியல் திணைக்களம் அங்கு செல்ல கூடாதெனவும் மீறி சென்றால் த ண்டிக்கப்படுவீர்கள் என மக்களுக்கு கூ றியிருந்தது.

இந்நிலையில் மிகுந்த போராட்டத்தின் பின்னர் நேற்றய தினம் ஆடி அமாவாசை விரதத்திற்கு மட்டும் வெடுக்குநாறி மலைக்கும் ஆலயத்திற்கும் மக்கள் செல்வதற்கு தொல்லியல் திணைக்களம் அனுமதி வ ழங்கியிருந்தது.

இந்நிலையில் வெடுக்குநாறி மலைக்கும் ஆலயத்திற்கும் செல்வதற்கு சில நிபந்த னைகளுடன் தொல்லியல் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்து நெடுங்கேணி பிரதேச்சபை உறுப்பினர் துரைராசா தமிழ்செல்வனுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது,

இன்று காலை நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தில் இருந்து அழைப்பு வந்தது. அதற்கமைய நாங்கள் பொலிஸ் நிலையத்திற்கு சென்றோம். அங்கே தொல்லியல் திணைக்கள அதிகாரகள் வந்திருந்தனர். தாம் வெடுக்குநாறி மலைக்கும் ஆலயத்திற்கும் செல்வதற்கும் தாம் அனுமதிக்கிறோம்.

ஆனால் ஆலயத்தை புனரமைப்பது அல்லது பெரிதாக கட்டுவது போன்ற செயற்பாடுகளை செய்வதாக இருந்தால் தம்முடைய ஒப்புதல் பெறவேண்டும் என கூறியுள்ளார் என கூறினார்.