பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ தேரேறி அருள்பாலித்த மாவைக் கந்தன் (VIDEO)

ஆசிரியர் - Admin
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ தேரேறி அருள்பாலித்த மாவைக் கந்தன் (VIDEO)

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா நேற்று வெள்ளிக்கிழமை(10) வெகுசிறப்பாக இடம்பெற்றது.

அதிகாலை விசேட அபிஷேக பூசைகளுடன் தேர்த் திருவிழா உற்சவக் கிரியைகள் ஆரம்பமானது. வசந்தமண்டபப் பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து மாவைக் கந்தப் பெருமான் குடை,கொடி, ஆலவட்டம் புடைசூழ வள்ளி, தெய்வயானை சமேதரராக ஆலய உள்வீதியில் எழுந்தருளி வலம் வந்தார்.

அதனைத் தொடர்ந்து காலை-09 மணியளவில் சித்திரத் தேரில் எழுந்தருளிய மாவைக் கந்தனுக்கு விசேட தீபாராதனைகள் இடம்பெற்றது.

தொடர்ந்து அடியவர்களின் அரோகராக் கோசம் முழங்க தவில், நாதஸ்வர இசை ஓசைகளுடன்அலங்கார நாயகனாக ஆலயப் பெருவீதியில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருட்காட்சி வழங்கினார்.

தேர்த் திருவிழா காண யாழ்.குடாநாட்டிலிருந்து மாத்திரமல்லாமல் வெளிமாவட்டங்கள் மற்றும் புலம்பெயர் தேசங்களிலிருந்தும் வருகை தந்த பல்லாயிரக்கணக்கான அடியவர் கூட்டம் ஆலயத் திருவீதியில் திரண்டிருந்தனர்.

இவ்வாலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இந்த மாதம்-18 ஆம் திகதி முற்பகல் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகித் தொடர்ந்தும் 25 தினங்கள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.

இந் நிலையில் இன்றைய தினம் புனிதமான கீரிமலை கண்டகி தீர்த்தத்தில் தீர்த்தோற்சவம் சிறப்பாக இடம்பெற்று வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

காணொளி உதவி:- சிவநிர்மலன். செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு