தொண்டைமானாறு செல்வச் சந்நிதியானுக்கு இன்று கொடியேற்றம்

ஆசிரியர் - Admin
தொண்டைமானாறு செல்வச் சந்நிதியானுக்கு இன்று கொடியேற்றம்

வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ்.வடமராட்சி தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயம் வருடாந்தப் பெருந்திருவிழா இன்று சனிக்கிழமை(11-08-2018) பிற்பகல்-04.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

தொடர்ந்தும் 15 தினங்கள் இடம்பெறவுள்ள இவ்வாலயப் பெருந்திருவிழாவில் 20 ஆம் திகதி திங்கட்கிழமை காலை-09 மணிக்கு கைலாச வாகனத் திருவிழாவும், 22 ஆம் திகதி புதன்கிழமை மாலை சப்பறத் திருவிழாவும், 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை-07.30 மணிக்குத் தேர்த் திருவிழாவும், மறுநாள் சனிக்கிழமை காலை-08 மணிக்குத் தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளன.

இதேவேளை, ஆலய வருடாந்தப் பெருந்திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளன.

ஆலயத்திற்குச் செல்லும் அடியவர்களின் நன்மை கருதி சிறப்புப் போக்குவரத்து, குடிதண்ணீர் மற்றும் சுகாதார வசதிகள் என்பன மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மஹோற்சவ காலங்களில் ஆலயச் சூழலில் அமைந்துள்ள 20 அன்னதான மடங்களிலும் அடியவர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு