கனத்த மனதுடன் வெடுக்குநாறி மலைக்கு விடைகொடுத்த மக்கள்..

ஆசிரியர் - Editor I
கனத்த மனதுடன் வெடுக்குநாறி மலைக்கு விடைகொடுத்த மக்கள்..

நெடுங்கேணி- ஒலுமடு வெடுக்குநாறி மலைக்கும் அங்குள்ள ஆதி ஜயனார் ஆலயத்திற்கும் இறுதியாக விடை கொடுத்து விட்டு கனத்த மனதுடன் வெடுக்குநாறி மலையிலிருந்து மக்கள் வெளியேறியுள்ளனர்.

ஒலுமடு வெடுக்குநாறி மலை தமிழர்களின் வரலாற்று சான்றுகளை தன்னகத்தே புதைத்து வைத்திருக்கும் மலையாகும். இதனை ஆக்கிரமிப்பதற்கு பல தடவைகள் முயற்சிக்கப்பட்டது.

எனினும் மக்களுடைய கடுமையான எதிர்ப்பினால் அவை நிறுத்தப்பட்ட நிலையில். தற்பொது தொல்லியல் திணைக்களம் தனது ஆழுகைக்குள் குறித்த மலையை கொண்டுவந்துள்ளது.

இந்நிலையில் கடுமையான போராட்டத்தின் பின் ஆடி அமாவாசை விரத வழிபாடுகளுக்காக இன்று வெடுக்குநாறி மலைக்கு சென்று வழிபாடு நடாத்திய மக்கள் இனிமேல் எப்போது வருவோம் என்பது தெரியாமல் 

கனத்த மனதுடன் வெடுக்குநாறி மலைக்கும் ஆதி ஜயனார் ஆலயத்திற்கும் விடை கொடுத்து அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு