போலி முறைப்பாட்டை ஏற்குமாறு வற்புறுத்தும் மாகாணசபை உறுப்பினர்..

ஆசிரியர் - Editor I
போலி முறைப்பாட்டை ஏற்குமாறு வற்புறுத்தும் மாகாணசபை உறுப்பினர்..

வெளிநாட்டில் நிற்கும் பிள்ளைக்கு வதிவிட அனுமதி பெறும் நோக்கில் தம்மை அச்சுறுத்துவதாக மனித உரிமை ஆணைக்குழுவில் போலியாக முறையிடச் சென்றவரின் முறைப்பாட்டை ஏற்குமாறு வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஒருவர் ஆணைக்குழுவிற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் வசிக்கும் ஒருவர் தம்மை இனம் தெரியாத சிலர் அச்சுறுத்துவதாகவும் அதனால் தமக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது. என யாழ்ப்பாணம் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்யச் சென்றுள்ளனர். 

இதனையடுத்து குறித்த விடயத்தினை முறைப்பாடாக ஏற்பதற்கு முன்னர் ஆணைக்குழு உறுப்பினர் மேற்கொண்ட ஆராய்வில் முன்னுக்குப் பின் முரண்பாடான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு முரண்பாடான தகவல்கள் வழங்கப்பட்டமையினால் ஆணைக்குழுவின் மேலும் தீவிரமாக ஆராய்ந்தபோது முறையிடச் சென்றவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஐரோப்பியநாடு ஒன்றில் தற்போது வதிவிட அனுமதி இன்றி தற்காலிகமாக வசித்து வரும் நிலையில் நிரந்தர வதிவிட அனுமதியை பெறும் நோக்கில் போலியான முறைப்பாட்டை பதிவு செய்ய முயன்றுள்ளார்.

 என்பது கண்டறியப்பட்டது. இதனால் குறித்த முறைப்பாட்டினை ஏற்க மனித உரிமை ஆணைக்குழு மறுத்து விட்டது. இந்த நிலையில் குறித்த விடயத்தினை முறைப்பாடாக ஏற்று பதிவு செய்யுமாறு யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த ஓர் மாகாண சபை உறுப்பினர் யாழ்ப்பாணம் மனித உரிமை ஆணைக்குழுவிற்கு எழுத்தில் கடிதம் அனுப்பியுள்ளார். 

இதனால் குறித்த விடயத்தினை மாவட்ட ஆணைக்குழு தற்போது தலமைப் பணிமனைக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு