நீதிமன்றத்தால் அடையாளப்படுத்தப்பட்ட அமைச்சர்களை நான் அழைக்கவில்லை..

ஆசிரியர் - Editor I
நீதிமன்றத்தால் அடையாளப்படுத்தப்பட்ட அமைச்சர்களை நான் அழைக்கவில்லை..

யாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் குற்றச் செயல்கள் குறித்து ஆராய்வதற்கா கூட்டத்திற்கு அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா? என ஊடகவியலாளர்கள் எழுப்பி கேள்வி ஒன்றுக்கு பநிலளித்த முதலமைச்சர் நடைமுறையில் அமைச்சர்களாக இருப்பவர்களையே அழைத்தேன் நீதிமன்றம் கூறிய அமைச்சர்களை நான் அழைக்கவில்லை என பதிலளித்துள்ளார்.

யாழ்.குடாநாட்டில் இடம்பெறும் குற்றச் செயல்கள் குறித்து ஆராய்வதற்கான கலந்துரையாடல் நேற்று முதலமைச்சர் சீ.வி.விக் னேஷ்வரனின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் அமைச்சர்கள் இருவர் மட்டும் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது பொலிஸாருடனான கலந்துரையாடலுக்கு சகல அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக் கப்பட்டதா? என ஊடகவியலாளர் ஒருவர் முதலமைச்சரிடம் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளிக்கும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், நடைமுறையில் அமைச்சர்களாக உள் ளவர்களுக்கே நான் கூட்டத்திற்கான அழைப்பு விடுத்திருந்தேன். அதற்கு மேல் நீதிமன்றத்தினால் கூறப்பட்ட அமைச்சர்க ளை நான் அழைக்கவில்லை. என பதிலளி த்தார். இதேவேளை வடமாகாண அமைச்ச ர் சபை தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்திருக்கும் நிலையில் முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு