தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது இலங்கை

ஆசிரியர் - Admin
தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது இலங்கை

இலங்கை – தென்ஆப்பிரிக்கா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் மூன்று போட்டிகளிலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்று 3-0 என முன்னிலை  பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பல்லெகலேயில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

மழையின் காரணமாக ஆட்டம் 39 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இலங்கை அணியின் நிரோஷன் டிக்வெலா, உபுல் தரங்கா ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

டிக்வெலா 34 ரன்களும், தரங்கா 36 ரன்களும்,குசால் மெண்டிஸ் 11 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். தொடர்ந்து இறங்கிய குசால் பெராரா அரை சதமடித்து அசத்தினார். அவர் 51 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

திசாரா பெராராவும், டாசன் ஷனகாவும் அதிரடியாக ஆட இலங்கை அணி 300 ரன்களை கடந்தது. இறுதியில், இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 39 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 306 ரன்கள் எடுத்தனர்.

ஷனகா 34 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து அவுட்டானார். திசாரா பெராரா 51 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.

தென் ஆப்பிரிக்கா தரப்பில் லுங்கி நிகிடி, டுமினி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 307 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா இறங்கியது. ஆனால் இலங்கை அணியினரின் சிறப்பான பந்து வீச்சால் அந்த அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

தென் ஆப்பிரிக்கா அணியில் ஹசிம் ஆம்லா 40 ரன்களும், டுமினி 38 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் விரைவில் அவுட்டாகினர்.

இதனால் தென் ஆப்பிரிக்க அணி 21 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 187 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மழை குறுக்கிட்டது. இதைத்தொடர்ந்து, டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 3 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி ஆறுதல் வெற்றி பெற்றது.

இலங்கை அணி சார்பில் சுரங்கா லக்மல் 3 விக்கெட்டும், திசாரா பெராரா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது டாசன் ஷனகாவுக்கு வழங்கப்பட்டது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு