இலங்கையில் ஹென்ரிக்ஸ் சாதனை

ஆசிரியர் - Admin
இலங்கையில் ஹென்ரிக்ஸ் சாதனை

ஒருநாள் போட்டியில் அதிவேக சதம் அடித்த அறிமுக வீரர் என்ற சாதனை படைத்தார் தென் ஆபிரிக்காவின் ஹென்ரிக்ஸ்.

இவரின் விளாசல் கைகொடுக்க தென் ஆபிரிக்கா 78 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது.

இலங்கை சென்றுள்ள தென் ஆபிரிக்கா 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகள் முடிவில், தென் ஆபிரிக்கா 20 என முன்னிலையில் இருந்தது. மூன்றாவது போட்டி கண்டியில் நடந்தது.

இந்தப் போட்டியில் தென் ஆபிரிக்கா சார்பில் ரீசா ஹென்ரிக்ஸ் அறிமுக வாய்ப்பு பெற்றார். 88 ஆவது பந்தில் ஹென்ரிக்ஸ் சதம் எட்டினார். இவர் 102 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். தென் ஆபிரிக்க அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 363 ஓட்டங்கள் எடுத்தது.

இதையடுத்து ஆடிய இலங்கை அணி 45.2 ஓவரில் 285 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து 78 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன்மூலம், இரண்டு போட்டி மீதமுள்ள நிலையில் தென் ஆபிரிக்கா 30 என தொடரைக் கைப்பற்றியது.

அதிவேக சதம்: தென் ஆபிரிக்காவின் 28 வயதான ரீசா ஹென்ரிக்ஸ் 88 பந்தில் சதம் கடந்தார். இதன்மூலம், ஒருநாள் அரங்கில் அறிமுகப் போட்டியில் அதிவேக சதம் விளாசிய வீரர் என்ற சாதனை படைத்தார். இதற்கு முன், ஹொங்கொங்கின் மார்க் சாப்மேன் 103 ஓட்டங்களில் (எதிர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், 2015, டுபாய்) சதமடித்ததே சாதனையாக இருந்தது.

மூன்றாவது வீரர்: ஒருநாள் அரங்கில் அறிமுகப் போட்டியில் சதம் அடித்த 3 ஆவது தென் ஆபிரிக்க வீரர் என்ற பெருமை பெற்றார் ஹென்ரிக்ஸ். ஏற்கனவே, கோலின் இன்கிராம் (எதிர் சிம்பாப்வே, 2010, போம்போன்டெய்ன்), பாவுமா (எதிர் அயர்லாந்து, பினோனி, 2016) இந்த இலக்கை எட்டியிருந்தனர்.

* ஒட்டுமொத்தமாக இந்த சாதனையை நிகழ்த்திய 14 ஆவது சர்வதேச வீரரானார் ஹென்ரிக்ஸ்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு