அரசியலை சேவையாக கருதுபவர்கள் சேர்ந்தால், தொடர்ந்து அரசியலில் இருப்பேன்..
டெலோ கட்சியில் இருந்து விலகியுள்ள கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான கணேஷ்வேலாயுதம் புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக கூறியுள்ளார்.
மேற்படி விடயம் குறித்து யாழ்.நகரில் உள்ள விடுதி ஒன்றில் இன்று மதியம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கூறுகையில், கடந்த 02.08.2018ம் திகதி டெலோ கட்சியில் இருந்து விலகுவதா கட்சியின் செயலாளர் நாயகம் என்.சிறீகாந்தாவிடம் கடிதம்
கொடுத்துள்ளேன். டெலோ அமைப்புக்குள் பிளவு என செய்திகள் வெளியிடப்பட்டன. ஆனால் உண்மை அதுவல்ல. நான் மட்டும் விலகி இருக்கிறேன். அதற்கான காரணம் மக்களுடைய அபிவிருத்தி,
கல்வி மேம்பாடு, பொருளாதார அபிவிருத்தி போன்றவற்றுக்கான திட்டங்கள் கட்சிக்குள் இல்லை. மேலும் கட்சி இந்த விடயங்களில் சுயாதீனமாக செயற்பட இயலாத நிலையில் உள்ளது.
இதனாலேயே கட்சியில் இருந்து விலகியுள்ளேன் என்றார்.
புதிய கட்சி ஒன்றை தொடங்குவீர்களா? மா காணசபை தேர்தலில் போட்டியிடுவீர்களா? என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில்,
ஆம் புதிய கட்சி ஒன்றை தொடங்கும் எண்ணம் உள்ளது. ஆனால் அரசியலை சேவை யாக கருதும் தரப்புக்களுடன் இணைந்து பொருளாதாரம், கல்வி, போன்ற துறைகளின் மேம்பாட்டுக்கு உழைக்கும்
தரப்புக்களுடன் இணைந்து புதிய கட்சி யை ஆரம்பிக்கும் எண்ணம் உள்ளது. அதேவேளை மாகாணசபை தேர்தலில் போட்டியிடும் விருப்பம் உள்ளது. அதற்கும் கூட அரசியலை சேவையாக கருதுபவர்கள்
தங்கள் ஊதியத்தை கூட மக்களுக்கு வழங்க கூடியவர்களை தேடுகிறோம். அப்படி அமைந்தால் நிச்சயமாக மாகாணசபை தேர்தலில் போட்டியிடுவேன் என்றார்.