தொலைபேசியில் ஆபாச படம் காட்டி 16 வயது சிறுமியை சீரழித்த பொலிசார்.
திருகோணமலை – அபேபுர பகுதியில் 16 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த பொலிஸ்உத்தியோகத்தர் ஒருவரை, நேற்று (03) இரவு உப்புவெளி பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவராவர்.
குறித்த நபர், தனது வீட்டுக்கு அருகாமையில் உள்ள 16 வயது சிறுமி ஒருவரிடம், தனது அலைபேசியை காண்பித்து இணைத்தளத்தில் வந்த படங்களை காண்பித்து துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
இது தொடர்பில், உப்புவெளி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமையவே, குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.