தேசிய ஒருபைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் செயற்றிட்டங்கள் குறித்து ஆராய்வு..
தேசிய ஒருபைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தினால் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படுகின்ற செயற்திட்டங்கள் தொடர்பில் யாழில் ஆராயப்பட்டுள்ளது.
மேற்படி அலுவலகத்தின் தலைவியும் முன்னாள் ஐனாதிபதியுமான சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க தலைமையில் யாழ் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று காலையில் இக் கஙந்துரையாடல் நடைபெற்றது.
இதன் போது இந்த அலுவலகம் அமைக்கப்பட்டு கடந்த மூன்று வருடங்களில் முன்னெடுத்த செயற்திட்டங்கள் தொடர்பிலும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற செயற்பாடுகள் குறித்தும் ஆராயப்பட்டது.
அதேவேளை இந்த அலுவலகத்தினூடாக யாழ்.மாவட்டம் உட்பட வடக்கு மாகாணத்தில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்திட்டங்கள் குறித்தும் ஆராயப்பட்டு பலரதும் கருத்துக்களும் பெறப்பட்டன.
இக் கலந்துரையாடலில் மேற்படி அலுவலகத்தின் அதிகாரிகள் அரசியல் வாதிகள் மற்றும் அரச வங்கிகள், அரச அலுவலகங்களின் அதிகாரிகள் உட்பட பலரும் கலந்நு கொண்டிருந்தனர்.
இதில் வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவஞானம் சிறிதரன் உட்பட மாகாண சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.