முல்லைத்தீவில் தென்னிலங்கை மீனவர்கள் அத்துமீறலை கண்டித்து தொடர் போராட்டம் ஆரம்பம்..

ஆசிரியர் - Editor I
முல்லைத்தீவில் தென்னிலங்கை மீனவர்கள் அத்துமீறலை கண்டித்து தொடர் போராட்டம் ஆரம்பம்..

முல்லைத்தீவு மாவட்டத்தில் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து இன்று காலை பாரிய முற்றுகை போராட்டம் ஒன்று இடம்பெற்ற நிலையில், குறித்த முற்றுகைப் போராட்டம் தொடர் போராட்டமாக மாற்றப்பட்டிருக்கின்றது. 

தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறல்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகரித்துவருவதுடன், தென்னிலங்கை மீனவர்கள் சட்டவிரோத தொழில்களிலும் ஈடுபடுவதாக மீனவர்கள் தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டி வருகின்றனர். 

இதனடிப்படையில் தென்னிலங்கை மீனவர்களின் அத் துமீறல்களை கட்டுப்படுத்தக்கோரியும், அவர்களால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத தொழில்களை கட்டுப்படுத்தக்கோரியும் முல்லை மாவட்ட மீனவர்கள் கடந்த மாததத்தின் இறுதியில் கவனயீர்ப்பு போராட்டம் 

ஒன்றை நடாத்தியிருந்தனர். இதன்போது மீனவர்களின் கோரிக்கைகi ள ஏற்றுக் கொண்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களம் அதனை நடைமுறைப்படுத்த தவறிய நிலையில்,  நேற்று முன்தினம் முல்லை மாவட்ட மீனவர் அமைப்புக்கள் ஒன்றிணைந்து 

கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடாத்தும் தீர்மானத்தை எடுத்திருந்தனர். இந்த தீர்மானத்திற்கமையவே நேற்றய போராட்டம் நடாத் தப்பட்டுள்ளது. 

ஊர்வலம் ஆரம்பம்..

காலை 10 மணிக்கு முல்லைத்தீவு நகரில் உள்ள சுனாமி நினைவாலயம் முன்பாக மக்களுடைய ஊர்வலம் ஆரம்பமானது. இதன்போது “சட்டவிரோதமாக முல்லைத்தீவுக்குள் நுழைந்து சட்டவிரோத தொழில்களை செய்வோரை வெளியேற்று”, 

“நந்திக்கடல் களப்பில் சட்டவிரோத தொழில்களை  உடன் நிறுத்து”, “முல்லைத்தீவு  கடல்வளத்தை அழிக்க துணைபோகாதே”, என்பனபோன்ற கோஷங்கள் எழுதப்பட்ட பதாகைகளை தாங்கியவாறும், கோசங்களை எழுப் பியவாறும் ஊர்வலமாக 

மாவட்ட நீரியல்வளத்துறை திணைக்களம் வரையில் சென்றிருந்தனர். இந்த ஊர்வலம் மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்றிருந்தது. 

ஊர்வலம் முற்றுகை போராட்டமாக மாறியது..

முல்லைத்தீவு நகரில் இருந்து ஊர்வலமாக சென்றிருந்த மீனவர்கள் மாவட்ட நீரியல்வளத்துறை திணைக்களம் முன்பாக காலை 10.30 மணியளவில் கோஷங்களை எழுப்பியவாது போராட்டம் ஒன்றை நடாத்தியிருந்தனர். 

இதன்போது மீனவர்கள் தமது கோரிக்கைகள் தொடர்பாக நீ ரியல்வளத்துறை திணைக்கள பணிப்பாளருடன் நேரடியாக பேசுவதற்கு பணிப்பாளரை அலுவலகத்திற்குள் இருந்து வெளியே வருமாறு அழைத்திருந்தனர். 

எனினும் பணிப்பாளர் அதனை மறுத்ததுடன், தேவை எனில் மீனவர்கள் தம்மை வந்து சந்திக்கலாம் என கூறியதுடன், ஊர் வலம் வருவதற்கு முன்னரே திணைக்களத்திற்கு பொலிஸ் பாதுகாப்பை பெற்றிருந்தார். 

இதனை யடுத்து கோபமடைந்த மீனவ மக்கள் பூட்டப்பட்டிருந்த கதவுகளை திறந்து கொண்டு உள்ளே சென்று போராட்டம் நடாத்துவதற்கு தீர்மானித்தனர். இதன்போது பொலிஸார் மக்களை தடுத்து நிறுத்தியதையடுத்து மேலும் கோபமடைந்த மக்கள் 

நீரியல்வளத்துறை திணைக்களத்தின் கதவுகளை இடித்து தள்ளியதுடன், வேலிகளை தள்ளி வீழ்த்தியும், வேலிகளுக்கு மேலால் ஏறி பாய்ந்தும் உள்ளே சென்று  பணிப்பாளருடைய வாகனத்தின் மீது ஏறி நின்று போராட்டம் நடாத்தியிருந்தனர். 

பொலிஸாருக்கும் மீனவர்களுக்குமிடையில் முறுகல்..

முற்றுகை போராட்டத்தை நடாத்தியிருந்த மீனவ மக்கள் கடற்றொழில் நீரியல்வளத்துறை தி ணைக்களத்திற்குள் நுழைந்ததை தொடர்ந்து பொலிஸாருக்கும், மக்களுக்குமிடையில் கடுமை யான வாய்த்தர்க்கம் உருவானது. 

பொலிஸார் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதுடன், கருத்துக்களையும் கூறியிருந்தனர். இதனை கடுமையாக எதிர்த்த மக்கள் பொலிஸாருடைய கருத்துக்களுக்கு எதிராக தாமும் கடுமையான 

கருத்துக்களை கூறியிருந்தனர். 

கலக தடுப்பு பொலிஸார் வருகை..

மக்கள் நீரியல்வளத்துறை திணைக்களத்திற்குள் நுழைந்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கலக தடுப்பு பொலிஸார் அழைக்கப்பட்டனர். அவர்கள் வருவதை அறிந்த மக்கள் நீரியல்வளத்துறை திணைக்களத்தின் மீது கற்களை வீசி தாக்குதல் நடாத்தியிருந்தனர். 

பின்னர் சம்பவ இடத்திற்கு கலக தடுப்பு பொலிஸார் வந்தபோதும், மக்களை கட்டுப்படுத்த இயலாத நிலையில் பொலிஸார் திணறிக் கொண்டிருந்தனர். பின்னர் ஒருவாறாக மக்கள் தங்கள் தீர்மானத்திப்படி நீரியல்வளத்துறை திணைக்களத்தின் 

மீதான தாக்குதலை நிறுத்தினர். 

நீரியல்வளத்துறை திணைக்களத்துடன் பிரதிநிதிகள் சந்திப்பு..

மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் மற்றும் மீனவர்களுடைய பிரதிநிதிகள் சிலர் சுமார் 3 ம ணிநேர போராட்டத்திற்கு பின்னர் கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்கள அதிகாரிகளை சந்தித்திருந்தனர். 

இதன்போது முல்லை மாவட்ட மீனவர்களின் கோரிக்கையான தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறல்கள் நிறுத்தப்படவேண்டும், முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத தொழில்கள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும். 

அதற்கான உத்தரவாதம் இன்றே வழங்கப்படவேண்டும். என கேட்டிருந்தனர். இதனையடுத்து கடற்றொழில் நீரியல்வளத்துறை அ மைச்சின் பணிப்பாளரிடமிருந்து முல்லை மாவட்ட பிரதி பணிப்பாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. 

அந்த கடிதத்தில் எதிர்வரும் 8ம் திகதி மத்திய கடற்றொழில் அமைச்சர், எதிர்கட்சி தலைவர் மற்றும் கடற்றொழில் அமைச்சு அதிகாரிகள் கலந்து கொள்ளும் கூட்டம் காலை 11. 30 மணிக்கு இடம்பெறும் எனவும், 

அந்த கூட்டத்தில் கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து பேசி தீர்க்கலாம். அதுவரை இந்த பிரச்சினைக்கு காரணமான விடயங்க ளை தற்காலிகமாக நிறுத்துமாறு கூறப்பட்டிருந்தது. இந்த கடிதம் பிரதிநிதிகளிடம் வழங்கப்பட்டது. 

பிரதிநிதிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுடன் மீள சந்திப்பு..

கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்கள அதிகாரிகளுடன் சந்திப்பினை மேற்கொண்டிருந்த பிரதிநிதிகள் அவர்களால் வழங்கப்பட்டி கடிதத்துடன் மீளவும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களுடன் சந்திப்பை நடத்தினர். 

இதன்போது திணைக்களம் வழங்கிய கடிதம் மீனவர்களுக் கு படித்துக் காண்பிக்கப்பட்டது. எனினும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களை ஏற்றுக் கொண்ட மக்கள் மாவட்டத்தில் 21 தென்னிலங்கை மீனவர்களுக்கு சட்டவிரோத 

தொழில்களுக்கான அனுமதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த அனுமதிகள் மீள பெறப்படவே ண்டும். எனவும் 8ம் திகதி கொழும்பில் நடைபெறும் கூட்டத்தில் சாதகமான தீர்மானம் எடுக் கப்படும்வரை  முற்றுகை போராட்டத்தை தொடருவதெனவும் தீர்மானித்தனர். 

இதற்கமைய உடனடியாகவே முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தின் முன்பாக கொட்டகை அமைக்கப்பட்டு தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு