இந்தியாவை பகைக்க மத்திய, மாகாண அரசுகளுக்கு விருப்பமில்லை..

ஆசிரியர் - Editor I
இந்தியாவை பகைக்க மத்திய, மாகாண அரசுகளுக்கு விருப்பமில்லை..

இந்தியாவை பகைத்தால் தங்கள் சுயலாபங்கள், சொகுசு வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதால் மத்திய அரசும், மாகாண அரசும் வடமாகாண மீனவர்களை பாதுகாக்கவேண்டிய பொறுப் பில் இருந்து தவறி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நிஹால் ஹலப்பதி கூறியுள்ளார்.

வடமாகாண மீனவர்கள் பிரச்சினை குறித்து இன்று யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார், இதன்போது மேலும் அவர் கூறுகையில், 

வடமாகாண மீனவர்களை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு மாகாணசபைக்கும், மத்திய அரசுக்கும் உள்ளது. அதனை அவர்கள் செய்யவில்லை. இந்திய இழுவை படகுகளின் அத்துமீறல்கள் இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. 

எரிபொருள் விலையேற்றத்தினால் மீனவர்கள் பாதிக்கப்படுவது தொடர்பாக எவரும் கரிசனை செலுத்தவில்லை. இவர்களுக்கு இந்தியாவை பகைக்க விருப்பமில்லை. இந்தியா வை பகைப்பதனால் தங்களுடைய சொகுசு வாழ்க்கையும் 

தங்களுக்கு கிடைக்கவேண்டிய நலன்களும் கிடைக்காமல்போகும் என அவர்கள் அவர்கள் நினைக்கிறார்கள். இந்த நாடு பொருளாதாரரீதியாக முன்னேற்றம் காணவேண்டுமானால் இந்த நாட்டில் உள்ள மீனவர்களுடைய பொருளாதாரம் வளரவேண்டும். 

மீனவர்களுடைய பொருளாதாரம் பாதுகாக்கப்படவேண்டும். ஆனால் அது இங்கே நடக்கவில் லை. மன்னார் முள்ளிக்குளம் கிராம மக்கள் கடற்றொழிலை அடிப்படை வாழ்வாதாரமாக கொண்ட மக்கள், அவர்களை அவர்களுடைய சொந்த நிலங்களில் 

மீள்குடியேற அனுமதிப்பதன் ஊடாகவே அவர்களுடைய பொருளாதாரத்தை வளர்க்க முடியும். ஆனாலும் இந்த விடயத்தில் அரசு இன்றளவும் கவனம் செலுத்தவில்லை. அமைச்சர் சஜித் பிறேமதாஸவை இப்போது கேட்கிறோம். 

முள்ளிக்குளம் மக்களுடைய மீள்குடியேற்றத்தை உடனடியாக செய்யவேண்டும். மேலும் இங்குள்ள அரசியல்வாதிகளிடமும், அரச அதிகாரிகளிடமும் மீனவர்கள் தொடர்பான தரவுகள் இல்லை என்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு